உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியல் நிலைமையில் தாக்கம் செலுத்தாது: ஆர்வலர்கள்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ராவின் சிறைத்தண்டனையானது, தாய்லாந்தின் தற்போதைய அரசியல் நிலைமையில் தாக்கம் செலுத்தாது என ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா குற்றவாளி என தீர்ப்பளித்த தாய்லாந்து உச்சநீதிமன்றம், அவருக்கு ஐந்து ஆண்டுகால சிறைத்தண்டனை விதித்து நேற்று (புதன்கிழமை) தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பானது நாட்டின் அரசியல் சூழ்நிலையை பாதிக்கும் என கருத்துக்கள் வெளியானது. இந்நிலையிலேயே ஆர்வலர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், தாய்லாந்தின் இடைக்கால அரசியலமைப்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ளபடி, நாட்டின் பொது அமைதி, ஒழுங்கு அல்லது தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் தடுக்க அரசாங்கத்திற்கு உரிமை உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

யிங்லக் அரசாங்கத்தில் வேளாண் மானியத் திட்டத்தின் கீழ் சந்தை விலையைவிட கூடுதல் விலையில் அரசாங்கத்திற்கு நெல்லை விற்க விவசாயிகளுக்கு சலுகை வழங்கப்பட்டதால் அரசாங்கத்திற்கு பல பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டது.

இதையொட்டி விவசாயிகள் நெல் உற்பத்தியை அதிகரித்ததால் அரசாங்கக் கிடங்குகளில் கிட்டத்தட்ட 18 மில்லியன் தொன் அரிசி விற்கப்படாமல் தேங்கிக் கிடந்தது. அதனை தொடர்ந்து 2014ஆம் ஆண்டு நடந்த இராணுவப் புரட்சி மூலம் யிங்லக் ஆட்சி கவிழ்ந்ததுடன், நிதி பொறுப்பற்ற ஊழல் நிறைந்த அரசாங்கமாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*