2015 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணித் தெரிவு நாளை!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியை தெரிவு செய்வது தெரிவு குழுவுக்கு சவாலான விடயமாக இருக்கும்.

இந்த பணியை சந்தீப்பட்டீல் தலைமையிலான 5 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் தெரிவு குழுவினர் நாளை மேற்கொள்கின்றனர்.

11ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி எதிர்வரும் பெப்ரவரி 14ஆம் திகதி முதல் மார்ச் 29ஆம் திகதி வரை அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெறுகின்றன.

இதற்கான அணிகள் ஜனவரி 7ஆம் திகதிக்குள் சர்வதேச கிரிக்கெட் சபை சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஏற்கனவே 30 பேர் கொண்ட உத்தேச அணி அறிவிக்கப்பட்ட நிலையில் அவற்றில் இருந்து 15 பேர் அடங்கிய இறுதி அணி தேர்வாகும்.

இந்திய அணியில் 8 துடுப்பாட்டக்காரர்கள், 3 சுழல்பந்து வீச்சாளர்கள், 4 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எனவே இந்திய அணி கீழ்கண்டவாறு இருக்கவே அதிக வாய்ப்புள்ளது.

துடுப்பாட்டக்காரர்கள்: டோனி (அணித்தலைவர்), விராட் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, ரோகித் ஷர்மா, ரஹானே ,ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு அல்லது ,முரளி விஜய், உத்தப்பா அல்லது விருத்திமான் சஹா.

சுழற்பந்து வீச்சாளர்கள்: அஸ்வின், அக்ஷர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா

வேகப்பந்து வீச்சாளர்கள்: புவனேஷ்வர்குமார், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா,உமேஷ் யாதவ் அல்லது ஸ்டூவர்ட் பின்னி.

இதில் உத்தேச அணியில் கழற்றி விடப்பட்ட யுவராஜ் சிங்குக்கு திடீரென ஒரு வாய்ப்பு நெருங்கி வந்துள்ளது. சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜா தோள்பட்டை காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.

திட்டமிட்டபடி ஜனவரி 20ம் திகதிக்குள் ஜடேஜா குணமடைய வேண்டும். அவர் அணியில் சேர்க்கப்பட்டு,உலகக்கிண்ண போட்டிக்குள் உடல்தகுதியை எட்டாவிட்டால், அதன் பிறகு காயத்தை காரணம் காட்டி அவருக்கு பதிலாக மாற்று வீரரை சேர்க்க உலகக்கிண்ண விதியில் இடமுண்டு.

அந்த வகையில் அதிர்ஷ்டம் யுவராஜ் சிங்குக்கு அடிக்கலாம். யுவராஜ் சிங் அண்மையில் ரஞ்சி கிரிக்கெட்டில் ‘ஹாட்ரிக்’ சதம் அடித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*