வெளிநாட்டில் பார்ட்டி: இறுதி காலத்தில் ரூ.500 கோடி சொத்துக்களுடன் மாட்டிய அதிகாரி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஆந்திர மாநிலத்தில் ஓய்வு பெற இருந்த அரசு அதிகாரியிடம் இருந்து 500 கோடி ரூபாய் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர பிரதேசத்தில் விஷாகபட்டினத்தைச் சேர்ந்த கோலா வெங்கட்ட ரகுராமி ரெட்டி என்பவர் அரசின் கீழ் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இவர் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார், பணி ஓய்வு பெறுவதால் அதற்கான பார்ட்டியை வெளிநாட்டில் தனது குடும்பம் மற்றும் உறவினர்களுக்கு வழங்குவதற்காக டிக்கெட் புக் செய்திருந்தார்.

இதற்கிடையில், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில், இவரது இருப்பிடம் மற்றும் சொத்துக்களை சோதனை செய்ததில் வருமானத்திற்கு அதிகமாக பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

ரெட்டியின் வீடு மட்டும் இல்லாமல் இவரது பினாமி உறவினர்கள் வீடு, நிறுவனங்கள் என மொத்தம் 15 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

19 கோடி ரூபாய் மதிப்பிலான கிலோ கணக்கில் தங்கம் மற்றும் வைர நகைகள் சிக்கியுள்ளன. மேலும் சிவபிரசாத்தின் மனைவி வசம் இருந்து தங்க நகைகள் மற்றும் மங்களகிரியில் உள்ள 16 பிளாட்டுகள் உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து வைத்து இருந்ததாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ரெட்டியை அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

பணி ஓய்வு பெறும் நேரத்தில் ஒரு அரசு ஊழியரிடம் இவ்வளவு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*