சரவணா ஸ்ரோர்ஸில் ஓவியாவைக் காண திரண்ட கூட்டம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

wwww

செங்னை சோழிங்க நல்லூரில் சரவணா ஸ்ரோர்ஸ் புதிய சொப்பிங் மோல் ஒன்றினை இன்று திங்கள்கிழமை நடிகை ஓவியா திறந்துவைத்தார்.

திறப்புவிழாவில் கலந்து கொண்ட நடிகை ஓவியா ரசிகர்கள் மத்தியில் தெரிவிக்கையில்;

எனக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு நன்றி. என்மீது ரசிகர்கள் அன்பு செலுத்தும்போது நான் எதற்கு ஒருவர் மீது மட்டும் காதல்கொள்ள வேண்டும்? நடிகை ஓவியா கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பிக் பொஸ்ஸின் 100 ஆவது நாளில் நான் நிச்சயம் கலந்து கொள்வேன். அப்போது ரசிகர்களை மீண்டும் சந்திப்பேன் என கூறிய அவர், பின்னர் பிக் பொஸ் நிகழ்ச்சியில் அவர் பாடிய “கொக்கு நெட்ட கொக்கு நெட்ட” பாடலை இந்த நிகழ்ச்சியிலும் ரசிகர்களுக்காக பாடிக் காண்பித்து அனைவரையும் உற்சாகப்படுத்தியுள்ளார்.

சரவணா ஸ்ரோர்ஸ் திறப்புவிழாவில் ஓவியா கலந்து கொள்கின்றார் என கேள்விப்பட்டதும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சரவணாவிற்கு திரண்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit