சினிமாவில் நடிக்க மறுத்த ஜிமிக்கி கமல் நாயகி

பிறப்பு : - இறப்பு :

யூரியூப்பில் (you tube) வெளியாகி 1 1\2 கோடி இரசிகர்களை ஈர்த்த ஜிமிக்கி கமல் நடன நாயகிக்கு தமிழ் பட வாய்ப்புக்கள் வந்தும் அவர் அதை தவிர்துள்ளார்.

மலையாள பாடலான “ஜிமிக்கி கமல் ” பாடலுக்கு நடனமாடிய ஆசிரியர் குழுவை எல்லோருக்கும் தெரியும். படத்தின் பாடல் காட்சிகளை பார்க்காதவர்கள் கூட இவர்களின் பாடலுக்கு ஆடிய அந்தக் காட்சிகளை பார்க்க தவறியிருக்க முடியாது.

இவ்வாறு சிறப்பாக நடனமாடிய பெண்ணின் பெயர் ஷெரில் என்பதாகும். கேரளம் மட்டுமின்றி தென்மாநிலம் முழுவதும் இவருக்கு இரசிகர் வட்டம் உருவாகிவிட்டது. இதுவும் யூடியூப்பில் ‘போஸ்டிங்’ ஆக அவரை சினிமாவில் நடிக்க வைக்க பல முக்கிய இயக்குனர்கள் திட்டமிட்டனர்.

இந்த நிலையில் தமிழ்பட இயக்குநர் ஒருவர் ஷெரினை தொடர்பு கொண்டு சினிமாவில் நடிக்க விருப்பமா என கேட்டுள்ளார். அதற்கு ஷெரில் தற்பொழுது அந்த எண்ணமெல்லாம் இல்லை, இப்பாடல் மூலம் பிரபலமான கல்லூரி நிர்வாகம் இதன்மூலம் கிடைக்கும் வருவாயை ஏழை மக்களின் நலத்திட்ட பணிகளுக்கு செலவிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit