தடைகளை உடைத்து சங்கத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்வேன் – மதனரூபன்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தடைகளை உடைத்து சங்கத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்வேன் – மதனரூபன்
கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு, சங்கத்திற்காகவும், அங்கத்தவர்களுக்காகவும் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி சங்கத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச்செல்வேன் என கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ள கனகையா மதனரூபன் தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை (26.09.2017) தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

மீள்குடியேற்றத்தின்போது அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் மிகவும் நெருக்கடியான நிலையில் இயங்கிவந்த சங்கத்தை நான் பொறுப்பேற்ற பின்னர் பல மாற்றங்களைக் கொண்டு வந்தேன். அங்கத்தவர்களுக்கு பல விசேட நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி அவர்களின் குடும்பம் வாழ்வாதாரத்தில் முன்னேறுவதற்கு கடுமையாக உழைத்தேன். குறிப்பாக, மேலதிகமாக உற்பத்தி செய்யப்படும் கள்ளை நிலத்தில் ஊற்றினால் குறித்த தொழிலை நம்பி வாழும் அங்கத்தவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படும் என்பதனைக் கருத்தில்கொண்டு அவற்றை போத்தலில் அடைத்து விற்பனை செய்யும் நடைமுறையை பின்பற்றி வருகின்றேன்.

நடைபெற்று முடிந்த புதிய நிர்வாக சபைத் தெரிவின்போது பல தரப்புகளினாலும் குறிப்பாக, அரசியல் பின்புலத்தாலும் நான் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து அவற்றையெல்லாம் முறியடித்து என்னை மீண்டும் அங்கத்தவர்கள் தங்களது சங்கத்தின் தலைவராக தெரிவுசெய்தமை எனது அர்ப்பணிப்பான கடுமையான உழைப்பால் ஆகும். எனவே, என்னை நம்பி எனக்கு அதிகூடிய வாக்குகளை அளித்து மீண்டும் என்னை தலைவராக தெரிவுசெய்த அனைத்து அங்கத்தவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்ளும் அதேநேரம், தொடர்ந்தும் சங்கத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வேன் என்றும், கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூ;டடுறவுச் சங்கத்தின் தலைவர் கனகையா மதனரூபன் மேலும் தெரிவித்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*