முதல்முறையாக மௌனம் கலைத்த விராட் கோஹ்லி; டோனியின் ஓய்வு முடிவு அதிர்ச்சியளிக்கிறதாம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மகேந்திர சிங் டோணி திடீரென டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது எதிர்பார்க்காதது என்றும், அதிர்ச்சியளிக்கிறது என்றும் புதிய கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது இந்தியா.

இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிந்த நிலையில், டோணி திடீரென டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். 4வது போட்டியில் கூட தன்னால் களமிறங்க முடியாது என்று பிசிசிஐ வாயிலாக டோணி அறிவிப்பை வெளியிட்டார். டோணியின் திடீர் முடிவுக்கு, துணை கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் அவருக்கு ஆதரவாக உள்ள பிசிசிஐ நிர்வாகிகள்தான் காரணம் என்று கிசுகிசுக்கப்பட்டது.

ஆனால் கோஹ்லி இதுவரை, டோணியின் ஓய்வு குறித்து கருத்து எதையும் சொல்லாமல் மவுனமாக இருந்து வந்தார். சிட்னியில் நாளை, ஆஸி.க்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில் இன்று நிருபர்களுக்கு கோஹ்லி பேட்டியளித்தார். அப்போது டோணி ஓய்வு குறித்தும், ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளப்போவது எப்படி என்பது குறித்தும் கோஹ்லி கூறினார்.

கோஹ்லி கூறியதாவது:

டோணி தனது ஓய்வு முடிவை அறிவித்ததும் ஒரு நிமிடம், நாங்கள் திணறிவிட்டோம். ஏனெனில் அணி வீரர்கள் யாருமே டோணி இதுபோன்ற முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. டோணியின் முடிவு குறித்து எங்களில் யாரிடமும் பதில் இருந்திருக்கவில்லை. எனவே, டோணியின் முடிவு எங்கள் அனைவருக்குமே மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது.

டோணியிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக, நெருக்கடியான சந்தர்ப்பங்களில், வெற்றி பெறுவது எப்படி என்பது குறித்து டோணியிடமிருந்து பாடம் கற்க வேண்டும். நெருக்கடியான நேரங்களில் டோணி எடுக்கும் முடிவுகள் அபாரமாக இருக்கும். இவையெல்லாம் விலைமதிப்பில்லாத குணநலன்களாகும்.

எந்த ஒரு கேப்டனாக இருந்தாலும், டோணியை போல திட்டமிட வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிக்காக கடுமையாக போராடும். ஆஸ்திரேலியாவுக்கு நாம் எதிலும் சளைத்தவர்கள் இல்லை என்ற எண்ணம் இந்திய அணி வீரர்களுக்கு வந்தால் வெற்றி எளிதாகிவிடும்.

நேர்மறையான எண்ணங்களுடன் சிட்னி டெஸ்ட் போட்டியை இந்தியா அணுக வேண்டும். இவ்வாறு கோஹ்லி தெரிவித்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*