புதிய அரசியலமைப்பு தமிழர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தும்: சீ.வி.விக்னேஸ்வரன்

பிறப்பு : - இறப்பு :

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான இடைக்கால அறிக்கை தமிழர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தும் என்பது திண்ணம் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சிங்கள – பௌத்த மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதாகவே குறித்த அறிக்கை உள்ளதுடன், எதனைப் புறக்கணித்து நாம் 70 வருடங்களுக்கு மேலாகப் போராடி வந்தோமோ அதனை வலியுறுத்துவதாகவே அறிக்கை அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

வடக்கு முதல்வர், கேள்வி – பதில்களுடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ஒருவர் நோயுற்றிருந்தால் அவரின் நோய் என்ன? அதற்கான சிகிச்சை என்ன? என்பதை முதலில் அறிந்து கொண்டே சிகிச்சையைத் தொடங்க வேண்டும். நாம் இப்போது எமது நோயைச் சரியவரப் புரிந்து கொள்ளவில்லை. அதற்குள் பல மருந்துகளைக் கொடுக்கத் தயாராகின்றோம். நோயைப் புரிந்து கொள்ள, நோயின் சரித்திரம் அவசியம்.

எவ்வாறான பின்புலம் இன்றைய நோயை ஏற்படுத்தியது என்று அறிந்தால் தான் உரிய சிகிச்சையைப் பரிந்துரைக்கலாம். தற்போது நாம் நோயைப் புரிந்து கொள்ளாது சிகிச்சையில் ஈடுபட்டுள்ளோம் என்பதே எனது அவதானம். இடைக்கால தேர்தல் அறிக்கை நோயை அறிந்ததாகவோ, தீர்க்கப்போதுமானதாகவோ தென்படவில்லை. நோயை அறியாத சிகிச்சை தோல்வியில் முடியும். அரைகுறைத் தீர்வு நோய்க்கு மருந்தாகாது. எனவே, தொடர்ந்து போராட வேண்டிய நிர்ப்பந்தத்தையே இந்த இடைக்கால அறிக்கை எமக்கு வழங்கியுள்ளது” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit