சுவிசில் விமரிசையாக நடைபெற்ற தாசீசியஸ் பவளவிழா (படங்கள், காணொளி இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமிழர் கலை பண்பாட்டு நடுவம் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஈழத்து நவீன நாடக முன்னோடி ஏ.சீ. தாசீசியஸ் அவர்களின் பவளவிழா லுற்சர்ன் மாநகரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பெண்ணியச் செயற்பாட்டாளரும் தாய்த் தமிழகத்தின் நவீன நாடக முன்னோடிகளுள் ஒருவருமான பேராசிரியர் அ.மங்கை முதன்மை விருந்தினராகவும், கிழக்கிலங்கைப் பல்கலைக் கழக முன்னைநாள் கலைப் பீடாதிபதி கலாநிதி பால சுகுமார் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் ஊடகவியலாளர்களான கிருஸ்ணா அம்பலவாணர் மற்றும் கனகரவி, அரங்கச் செயற்பாட்டாளர்களான சண், ரேமன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். ‘ஈழக்கூத்ததன் ஏ.சீ.தாசீசியஸ் – நாடகர், ஊடகர், ஏடகர்” என்ற பெயரிலான விழா மலரும் வெயிட்டு வைக்கப்பட்டது.

அரங்கச் செயற்பாட்டாளராக பொது வாழ்வில் பிரவேசித்த தாசீசியஸ் அவர்கள் ஆசிரியர், அரங்கப் பயிற்சியாளர், வானொலி அறிவிப்பாளர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர், தொலைக் காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், ஊடகப் பயற்சியாளர், பரப்புரையாளர் எனப் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

படங்கள் இங்கே

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*