மெக்சிக்கோ நிலநடுக்கம்: மீட்பு பணியில் இஸ்ரேலியர்கள்

பிறப்பு : - இறப்பு :

மெக்சிக்கோ நகரில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மீட்புப் பணி நடவடிக்கையில் இஸ்ரேல் மீட்புப் பணிக் குழுவினரும் ஈடுபட்டுள்ளனர்.

மெக்சிக்கோ நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுமார் 350 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி, பொதுவிடங்களில் தங்கியுள்ளனர்.

மேலும், நிலநடுக்கம் காரணமாக நகரில் அமைந்துள்ள சுமார் 52 கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கை அங்கு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் நிலையில், மெக்சிக்கோ நாட்டு மீட்புப் பணியாளர்களுடன் இஸ்ரேலிய மீட்புப் பணிக் குழுவினரும் கைகோர்த்துள்ளனர் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit