அரசியலில் நுழையும் நடிகர் கமலுக்கு முன்னணி கொமடி நடிகர் வாழ்த்து

பிறப்பு : - இறப்பு :

நடிகர் கமல்ஹாசன் அரசியல் பிரவேசம் செய்யபோவதாக அறிவித்துள்ள நிலையில், அவருக்கு நடிகர் விவேக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்குள் நுழைந்து தனிக்கட்சி தொடங்குவது உறுதியாகிவிட்ட நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் டுவிட்டரில் கமல்ஹாசனை வாழ்த்தியுள்ளார்.

அந்த பதிவில், அரசியலுக்கு வருவதை உறுதி செய்த கமல்! அவர் மனத்திண்மையைப் பாராட்டுகிறேன். இந்த உறுதி இறுதி வரை இருக்க நேர்மையாளரின் சார்பில் வாழ்த்துகிறேன்.

வருவது யாராக இருப்பினும், வாழ்த்துவது மரபாக இருப்பினும், மகுடம் தரிக்க வைப்பது மக்களே என விவேக் பதிவிட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit