திருமண ஆடையில் கின்னஸ் சாதனை படைத்த கண்டி மணப்பெண்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கண்டியில் இன்று நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணப்பெண் உலக சாதனை படைத்துள்ளார்.

மணமகள் 3,200 மீற்றர் நீளமான ஒசரி புடவையை அணிந்து சாதனையை பதிவு செய்துள்ளார்.

இன்று முற்பகல் இந்த தம்பதியினர் கன்னொருவ சந்திக்கு வந்த பின்னர், கின்னஸ் சாதனையை கண்காணிக்கும் குழு முன்னிலையில் , ஒசரி புடவையின் நீளம் அளவிடப்பட்டுள்ளது.

குறித்த புடவை கண்டி கெடம்பே சந்தியில் இருந்து ஈரியகம சந்தி வரை நீளமுடையது என கணக்கிடப்பட்டுள்ளது.

பாரவூர்தியொன்றில் கொண்டு வரப்பட்ட ஒசரி புடவை, வீதியில் சுமார் 250 மாணவர்களால் தாங்கி பிடிக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வின் போது மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவும் கலந்து கொண்டார்.

இதற்கு முன்னர் இந்திய பெண்ணொருவர் நீளமான புடவையை அணிந்து சாதனை படைத்தார். அதன் நீளம் 2,800 மீற்றராகும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*