உயிருக்கு போராடிய நர்ஸ்க்கு சொந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்க மறுத்த பரிதாபம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமிழகத்தில் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதற்கு, மருத்துவர் தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கோவில்பட்டியைச் சேர்ந்தவர் தாட்சாயிணி. இவர் முத்தானந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் இரண்டு வருடமாக நர்ஸாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் தாட்சாயிணி நேற்று இரவு வீட்டில் வாயில் நுரை தள்ளி நிலையில் மயக்க நிலையில் இருந்துள்ளார். இதனால் அவரது அம்மா தாட்சாயிணி பணிபுரிந்து வந்த மருத்துமனைக்கே கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் அவர்களோ இங்கு பார்க்க முடியாது. அரசு மருத்துவமனைக்கு கொண்டு போங்க என கூறி மருத்துவமனைக்குள்ளேயே விடாமலும் உடன் வேலைபார்க்கும் பெண் என்றுகூட பார்க்காமல் மனசாட்சி இல்லாமல் ஊழியர்கள் பேசி அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கும் மருத்துவர் இல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறியுள்ளனர்.

பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாட்சாயிணி சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தற்கொலை தான் என்று கூறி வந்த நிலையில், தாட்சாயிணி பணிபுரிந்து வந்த மருத்துவமனையில் மருத்துவர் காந்திராஜன் பாலியல் தொந்தரவு கொடுத்ததால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் இதற்கு முன் 4 நர்ஸ்கள் இப்படி தற்கொலை செய்து கொண்டனர் எனவும் உயிருக்குப் போராடி கொண்டிருக்கும் நேரத்தில் இங்க பார்க்க முடியாது என்று சொல்லி துரத்தி அனுப்புவதற்கு காரணம் என்ன?

கோவில்பட்டி மருத்துவமனையில விஷம் குடித்தவரை காப்பாற்ற முடியவில்லை என்றால், அப்போ ஒரு மருத்துவர் கூட பணியில் இல்லையா? இல்லை காந்திராஜனை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மருத்துவர் இல்லை என்று சொல்லி அனுப்பி விட்டார்களா? என்று உறவினர்கள் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளனர்.

இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதால், முழு விசாரணைக்கு பின்னரே முழு உண்மை தெரியவரும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*