பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் 695 சந்தேக நபர்கள் கைது!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

2013 ஆம் ஆண்டில் இருந்து 2016 ஆம் ஆண்டு வரை பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் 695 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க இந்தத் தகவலைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2013 ஆம் ஆண்டு 156 சந்தேக நபர்களும், 2014 ஆம் ஆண்டு 251 சந்தேக நபர்களும் 2015 ஆம் ஆண்டு 120 சந்தேக நபர்களும் 2016 ஆம் ஆண்டு 16 சந்தேக நபர்களும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பலருக்கு எதிராக சாதாரண சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இன்னும் சிலருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நல்லாட்சி அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டம் வரைந்து, நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*