கணவருக்கு தற்கொலை மிரட்டல் விடுத்த பிரபல சீரியல் நடிகை!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

#Bose Venkat#Serials#Sonia Venkat
advertisement

போஸ் வெங்கட், சோனியா இவர்கள் இருவரையும் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. சீரியலில் மட்டுமல்ல சினிமாவில் நடித்து வருகிறார்கள். தற்போது சோனியா வெண்ணிலா கபடி குழு 2, தீரன் படத்தில் நடித்து வருகிறார்.

இதில் அவர் ஒருமுறை கணவருக்கு மொட்டை மாடி வாட்டர் டேங்கில் ஏறி போனில் மிரட்டல் விட்டாராம். இது எதற்காக என்பதை அவர் பத்திரிக்கை பேட்டியில் தெரிவித்துள்ளார்.

எங்கள் இருவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. நான் சினிமாவிலிருந்து சீரியலுக்கு வந்து நேரம். என் கணவருக்கு ஒரு படத்தில் வெயிட்டான ரோல் கிடைத்தது.

இதற்காக புது கெட்டப் வைத்து நடித்தார். அந்த நேரம் சீரியலில் அதே கெட்டப்பில் நடிக்க சொல்லி அவரை கேட்டார்கள். அவர் இல்லை, இது படத்திற்காக வைத்தது, வேண்டுமானால் தொப்பி போட்டு நடிக்கிறேன் என கூறினார்.

ஏற்கனவே அவரை சீரியல் வேண்டாாம், சினிமாவில் கவனம் செலுத்துங்கள் என பலமுறை சொல்லியிருந்தேன். அவர் கேட்கவில்லை. ஆனாலும் அவரை அப்படியே நடிக்க வைத்து விட்டார்கள் என கேள்விப்பட்டதும் உடனே போனுடன் மொட்டை மாடிக்கு ஓடினேன்.

டேங்கில் ஏறி இயக்குனர், என் கணவர் என மாறி மாறி போன் போட்டு மிரட்டினேன். தொப்பி போட்டு மறுபடியும் ஷூட் பண்ணுங்க. இல்லைனா குதிச்சிடுவேன் என கூறினேன். அப்பறம் நான் சொன்னதை அவர்கள் கேட்டதும் என் முடிவை மாற்றி கீழே இறங்கினேன் என கூறினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*