எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம்: தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட சபாநாயகர் தனபாலின் உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

தினகரன் ஆதரவு நிலைப்பாடு கொண்ட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி துரைசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜராகி வாதாடினார். அப்போது, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காகவே 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

முதல்வரை மாற்ற வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. எங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க போதிய அவகாசம் அளிக்கப்படவில்லை.

18 எம்.எல்.ஏக்களும் அரசுக்கு எதிராக செயல்படவில்லை. 3 வார காலத்துக்குள் அவசர கதியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற வாதத்தினை முன்வைத்தார்.

சபாநாயகர் தரப்பில் வாதிடுகையில், இந்த வழக்கில் அரசு மீதும், சபாநாயகர் மீதும் குற்றம்சாட்டப்படுவதால் விரிவான ஆவணங்களைத் தாக்கல் செய்ய 10 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும். அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 18 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டதற்கு தடைவிதிக்க மறுப்புத் தெரிவித்தார்.

மேலும், 18 தொகுதிகள் காலி என்று சபாநாயாகர் தரப்பில் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்துக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

அந்த கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் அவர் உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக பேரவைச் செயலாளர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசு கொறடா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 4-ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

அதேபோல், தி.மு.க. தொடர்ந்த வழக்கின் விசாரணையும் அக்டோபர் 4-ம் திகதி இந்த வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்படும் என்றும் நீதிபதி துரைசாமி குறிப்பிட்டார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*