அனிதா வீட்டுக்குச் செல்லும் மேலும் ஒரு பிரபலம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மாணவி அனிதாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, நாளை அரியலூர் செல்ல உள்ளார்.

நீட் தேர்வை எதிர்த்து அரியலூர் மாணவி அனிதா கடந்த 1-ம் திகதி தற்கொலை செய்துகொண்டார். இதனால், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தது.

அனிதாவின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். சினிமா பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

இறுதி அஞ்சலி முடிந்த சில நாள்களுக்குப் பிறகு, நடிகர் விஜய் ரகசியமாக அனிதா வீட்டுக்குச் சென்று அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

மேலும், அரசியல் கட்சிகள், சினிமா பிரமுகர்கள் அனிதா குடும்பத்தினருக்கு நிதியுதவியும் அளித்தனர். இந்தச் சூழ்நிலையில் அனிதா இறந்து 17 நாள்களுக்குப் பின்னர், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, நாளை அரியலூர் சென்று அனிதா குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கவுள்ளார்.

தீபா, அவர் கணவர் மாதவன் இருவரும் சேர்ந்து, அனிதா வீட்டுக்குச் செல்கின்றனர். மட்டுமின்றி நிதியுதவியும் அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*