நீலாங்கரை கற்பழிப்பு விவகாரத்தில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது!

பிறப்பு : - இறப்பு :

நீலாங்கரை கற்பழிப்பு விவகாரத்தில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 22-ம் திகதி இரவு செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் கண்ணீர் மல்க இளம்பெண் ஒருவர் புகார் கொடுத்தார்.

அதில், ‘நான் எனது காதலனுடன் நீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பீச்சில் பேசிக்கொண்டு இருந்தபோது, பொலிஸ் என்று சொல்லி ஒருவர், என்னிடம் விசாரித்தார்.

பிறகு என்னை மட்டும் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வருமாறு பைக்கில் அழைத்துச் சென்றார். திடீரென மெயின் ரோட்டை விட்டுப் பிரிந்து ஒரு தெரு வழியாக ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்குள் பைக் சென்றது. இதைப் பார்த்து நான் கூச்சலிட்டதும், சத்தம்போடாமல் வா… இல்லைன்னா உன்னையும், அவனையும் கொன்னுடுவேன் என்று அந்த நபர் மிரட்டினார்.

அதோடு அந்தப் பகுதியில் உள்ள ஓர் இடத்தில் என்னை பலாத்காரம் செய்துவிட்டு மீண்டும் மெயின் ரோட்டில் கொண்டுவந்து விட்டுவிட்டு மாயமாகிவிட்டார்’ என்று அந்தப் பெண் புகாரில் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக செம்மஞ்சேரி பொலிசார் முதல்கட்ட விசாரணையை முடித்துவிட்டு, சம்பவம் நடந்த இடம் நீலாங்கரை காவல் நிலையத்துக்கு உட்பட்டதால், அந்தப் பெண்ணை அங்கு அனுப்பி வைத்தனர்.

நீலாங்கரை பொலிசாரிடமும் இந்தத் தகவலை மீண்டும் அந்தப் பெண் கூறியுள்ளார்.

ஈ.சி.ஆர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள போலீஸாரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அப்போது திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு பொலிஸ் ஒருவர் பணிக்கு கு வராமல் இருப்பது தெரிந்தது.

சந்தேகத்தின் பேரில் அவரைத் தொடர்புகொண்டபோது அவர், அந்த நேரத்தில் வேறொரு இடத்தில் இருப்பதாக தெரியவந்தது. இதற்கிடையில் அந்தப் பெண் கூறிய இடத்தில் உள்ள ரகசிய கண்காணிப்பு கமெராக்களை பொலிசார் ஆய்வு செய்தனர். அதில் அந்தப் பெண் ஒருவருடன் பைக்கில் செல்லும் படம் பதிவாகி இருந்தது.

இதற்கிடையில் அந்தப் பெண்ணை பொலிசார் திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

அன்றைய தினம் அந்தப் பெண்ணின் விருப்பத்தின் பேரில் செக்ஸில் ஈடுபட்டு இருப்பதாகவும் யாரும் பலாத்காரம் செய்யவில்லை என்றும் மருத்துவர்கள் ரிப்போர்ட் கொடுத்தனர்.

இது பொலிசிற்கு கடும் குழப்பத்தை ஏற்படுத்தியது. காதலனுடன் உடலுறவு கொண்டுவிட்டு அதனை மறைக்க அந்தப் பெண் முயற்சிக்கிறார் என்று கூட பொலிசார் சந்தேகப்பட்டனர்.

ஆனால் கண்காணிப்புக் கமெராவில் பதிவாகி இருந்தது அந்தப் பெண்ணின் காதலன் அல்ல என்பதையும் பொலிஸ் உறுதிப்படுத்திக் கொண்டது.

கமெராவில் பதிவானவர் யார் என்று தேடியபோதுதான் அருள்மொழி என்பவர் சிக்கியிருக்கிறார். இவர் சோழிங்கநல்லூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றது இவர்தான் என்று பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

வழக்கை விசாரிக்கும் நீலாங்கரை இன்ஸ்பெக்டர் பாஸ்கர் இதுகுறித்து கூறியதாவது, அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தினோம். விசாரணையில் அந்தப் பெண்ணும், அவளது காதலனும் சென்னை புறநகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாமாண்டு படிக்கின்றனர்.

இவர்கள் அடிக்கடி இப்படி தனிமையைத் தேடுவதை அருள்மொழி என்பவன் தொடர்ந்து கவனித்து வந்திருக்கிறான். இந்த ஜோடி தனிமையில் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்த பிறகு, அதை வெளியில் சொல்லிவிடுவதாக மிரட்டி அந்தப் பெண்ணை அழைத்துப்போய், அந்தப் பெண்ணிடம் அத்துமீறியிருக்கிறான்.

மருத்துவ பரிசோதனையில் அந்தப் பெண்ணின் விருப்பத்தின் பேரில் செக்ஸில் ஈடுபட்டதாக ரிப்போர்ட் வந்தது எப்படி என்று பொலிசார் விசாரித்தபோது, கடத்தப்படுவதற்கு முன்பே நானும் என்னுடைய காதலரும் சந்தோஷமாக இருந்தோம் என்று அந்தப் பெண் கூறியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit