
எதிர்வரும் தேர்தல்கள் அனைத்தும் தொகுதி மற்றும் விகிதாசாரம் கலந்த புதிய முறையில் நடத்த தீர்மானித்துள்ள நிலையில், இதுதொடர்பில் அனைத்து கட்சிகளிடமும் குறை நிறைகள் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார்.
குருநாகல் மாவத்தகமையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், புதிய முறைக்கு அமைய எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல், மாகாண சபை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள், புதிய முறையின் கீழ் நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.