ஜப்பானை அச்சுறுத்தும் தாலிம் புயல்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஐப்பானில் தொடர்ந்து அடை மழை பெய்துவரும் நிலையில், அங்கு பாரிய சூறாவளி தாக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்கு உள்ளூர் விமான சேவைகளும் ரயில் சேவைகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
644 விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன என, அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பசுபிக் பெருங்கடலில் தாலிம் எனும் இந்தச் சூறாவளி உருவாகியுள்ளது. இந்தச் சூறாவளி ஜப்பானைத் தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜப்பானின் தென் பகுதியான க்யூஷுவில் மணிக்கு 162 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என, ஜப்பான் வானிலை நிலையம் கூறியுள்ளது.

ஜப்பானில் வெள்ளப்பெருக்கு, கடலில் நீர்மட்டம் உயர்தல், மண்சரிவு ஆகியவை ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு உள்ளன.

எனவே, பொதுமக்களை அவதானமாக இருக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*