58 நொடிகளில் விற்றுத்தீர்ந்த Mi Mix 2 ஸ்மார்ட்போன்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சீனாவில் நேற்று பிளாஷ் முறையில் விற்பனைக்கு வந்த சியோமி Mi Mix 2 ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கிய 58 நொடிகளில் முழுவதும் விற்றுத் தீர்ந்ததாக சியோமி அறிவித்துள்ளது.

58 நொடிகளில் விற்றுத்தீர்ந்த Mi Mix 2 ஸ்மார்ட்போன்
பீஜிங்:

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி, தனது ஸ்மார்ட்போன்களை பிளாஷ் முறையில் விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் ஒரு பிளாஷ் விற்பனையில் சியோமி நிறுவனம் எத்தனை யுனிட் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்கிறது என்ற தகவல் அறியப்படவில்லை.

அந்த வகையில் சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi Mix 2 ஸ்மார்ட்போனின் விற்பனை சீனாவில் நேற்று நடைபெற்றது. முதல் பிளாஷ் விற்பனையிஸ் சியோமி Mi Mix 2 ஸ்மார்ட்போன் 58 நொடிகளில் முழுமையாக விற்றுத் தீர்ந்தது. அடுத்த பிளாஷ் விற்பனை செப்டம்பர் 19-ம் தேதி நடைபெற இருக்கிறது.

சியோமி Mi Mix 2 சிறப்பம்சங்கள்:

– 5.99 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே
– ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
– 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி, 128 ஜிபி & 256 ஜிபி இன்டெர்னல் மெமரி
– 12 எம்பி பிரைமரி கேமரா
– 5 எம்பி செல்ஃபி கேமரா
– 3400 எம்ஏஎச் பேட்டரி

இத்துடன் சியோமி Mi Mix லிமிட்டெட் எடிஷன் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செராமிக் பாடி கொண்ட Mi Mix 2 ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. சீனாவில் முழுமையாக விற்றுத் தீர்ந்த Mi Mix 2 அடுத்த ஆண்டு வாக்கில் இந்தியாவில் வெளியிடப்பட இருக்கிறது.

இந்தியாவில் Mi Mix 2 விலை மற்றும் விற்பனை சார்ந்து எவ்வித தகவலும் இல்லை. சீனாவில் மூன்று மாடல்களில் கிடைக்கும் Mi Mix 2 இந்தியாவில் எத்தனை பதிப்புகளை வெளியிடும் என்பதும் மர்மமாகவே உள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*