மகிந்தவின் கட்சிக்கு வடக்கிலிருந்து கிடைத்த நற்செய்தி

பிறப்பு : - இறப்பு :

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கட்சிக்கு வடக்கிலிருந்து கிடைத்துள்ள நற்செய்தி காரணமாக அக்கட்சி முக்கியஸ்தர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

யாழ். மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவருமான தவராசா கடந்த வாரம் பசில் ராஜபக்சவை சந்தித்து உரையாடியுள்ளார்.

தமிழில் “வணக்கம்” தெரிவித்து கலந்துரையாடலை ஆரம்பித்த தவராசா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாண மக்களை ஏமாற்றி வருகின்றது.

அவர்கள் செய்ய முடியாத விடயங்களையே அரசாங்கத்திடம் கோரிக்கையாக முன்வைக்கின்றனர். அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்தே எமது மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், வடக்கு மக்கள் மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த மீதான நல்லப்பிராயம் தற்போது அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மகிந்தவின் பெறுமதியை தற்போதுதான் வடக்கு மக்கள் உணரத் தலைப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்போது தவராசாவுக்கு முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து பசில் ராஜபக்‌ச நினைவூட்டியுள்ளார்.

இதேவேளை, வடக்கில் மகிந்தவுக்கான ஆதரவு அதிகரித்து வரும் தகவல் அவரது பொதுஜன பெரமுண கட்சி முக்கியஸ்தர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit