பேர்ன் சுவிற்சர்லாந்தில் சைவமும் தமிழும் வெள்ளிவிழா

பிறப்பு : - இறப்பு :

சைவநெறிக்கூடம் எனும் பக்தி மன்றம் 1994ம் ஆண்டு சுவிற்சர்லாந்தில் இளவயதினரால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பாகும். இன்று 23 ஆண்டுகளை சைவநெறிக்கூடம் கடந்து வெள்ளி ஆண்டை நோக்கி நகரும்வேளை பேர்ன் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் ஆண்டுகள் பத்தை நிறைவுசெய்துள்ளது.

சைவநெறிக்கூடத்தின் அறங்காவலில் மூன்று தமிழ் வழிபாட்டுத் திருக்கோவில்கள், பேர்ன், மரத்தித்தினி ஆகிய நகர்களில் சுவிற்சர்லாந்திலும் ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் மூன்றாவது தமிழ்வழிபாட்டுத் திருக்கோவிலும் இறையருளால் அமைந்து ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் அருளாட்சி புரிகிறார்.

இனம், மொழி, சமயம், பண்பாடு வரலாறு இவை அனைத்தும் சைவநெறிக்கூடம் தமிழ்மக்கள் ஒழுகவும், அடுத்த தலைமுறையினர்களுக்கு சொத்தாக இவற்றை வழங்குவதையும் நோக்ககாக் கொண்டு செயற்படுகிறது.

வழமையாக குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் சைவமும் தமிழும் போட்டி நிகழ்விற்குப் பதிலாக இம்முறை வெள்ளிவிழாவாக அமைதியான முறையில் போட்டி தவிர்து நடைபெற்றது.

காலை 09.00 மணிமுதல் 10.30 மணிவரை காலைச் சிற்றுண்டி அளிக்கப்பட்டது. 10.30 மணிக்கு செந்தமிழ் திருமறையில் திருநிறை. குழந்தை விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் கரிமுகக்கடவுள் வழிபாட்டுடன் நிகழ்வை தொடங்கி அடுத்து ஞானாம்பிகை உனடயா ஞானலிங்கேச்சுரர் பெருமானிற்கும், ஞானலிங்கேச்சுரம் எழுந்து அருள்புரியும் அனைத்துத் தெய்வங்களுக்குமாக சிறப்பு வழிபாட்டினை நடாத்தினார்.

வழிபாட்டை அடுத்து வரவேற்பு உரையினை திருநிறை. சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் ஐயா அவர்கள் ஆற்றினார். நல்லாசி உரையினை சிவஞானசித்தர்பீடத்தின் நிறுவனர் திருநிறை. நடராசா யோகேந்திரன் ஐயா அவர்கள் ஆற்றினார்கள். அவர் தனது உரையில் தாயகத்தில் அல்லலுறும் உறவுகளுக்கு கைகொடுக்கும் அமைப்பாக எதிர்காலத்தில் சைவநெறிக்கூடம் மாறவேண்டும் எனத்தன் நல்லாசியை வழங்கினார்.

பேர்ன் ஸ்ரீ கல்யாணசுப்பிரமணியர் திருக்கோவில் பெயரால் திருமதி. மனோகரி அவர்களால் வாழ்த்துப்பாவும், திருமதி மூர்த்தி பிரியா அவர்களின் கவிவாழ்த்தும், மேடையில் படித்தளிக்கப்பட்டன.
ஈழத்தில் சுதுமலையை பிறப்பிடமாகவும், ஐக்கியராச்சியத்தை வாழ்விடமாகக் கொண்ட திருநிறை. இராஜமனோகரன் (சைவசித்தாந்தப்புலவர்) அவர்களின் தலைமையில் சைவசித்தாந்தமும் – சைவவாழ்வியல் முறையும் பயிலரங்கமாக நடைபெற்றது. அனைத்து தமிழ் மக்களும் ஆர்வத்துடன் பங்கெடுத்தனர். கடினமான சைவசித்தாந்த தத்துவத்தை, எளிய முறையில் யாவரும் புரியும் வகையில் சிறந்த எடுத்துக்காட்டுக்களுடன் எடுத்து விளக்கி, நகைச்சுவையும் கலந்தளத்தது அனைவராலும் பாராட்டப்பட்டது.

நண்பகல் அறுசுவை உணவு விழாவிருந்தாக சைவநெறிக்கூடத்தால் அளிக்கப்பட்டது.
14.30 மணிக்கு மர்த்தினி மற்றும் பேர்ன் நகரைச் சேர்ந்த குழந்தைகள் இறைதிருவுருதாங்கி திருவேடம் போட்டியில் பங்கெடுத்து, மழலைச் செல்வங்கள் தெய்வங்காள அருட்காட்சி அளித்தனர். சிவருசி ஐயா அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க திருநிறை. செல்வரட்ணம் சுரேஸ் அவர்கள் இந்நிகழ்வினை குழந்தைகுளுக்கு ஏற்ற முறையில் நயமுடன் இனிமையாக நடத்தியளித்தார்.

15.30 மணிக்கு வளரும் இளவல் திருவளர். சபீன் அவர்களின் பயிற்சியில் ராஜ்கண்ணா தரணிகா, சுரேஸ்குமார் அமிர்தவர்சினி, முரளிதரன் செவ்வேள் ஆகியோர் புல்லாங்குழல் இசைத்தனர்.

பயிலரங்கத்திலும், திருவேடம் தாங்கல் போட்டியிலும் பங்கெடுத்த சிறார்களுக்கு சான்றிதழும் பரிசல்களும் அளிக்கப்டப்டன.

16.00 மணிமுதல் ஈழத்தில் இருந்து ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் திருவிழாவிற்கு இசைநல்க வருகை அளித்திருக்கும் திருநிறை மதுசூதனன் குழுவினரின் மங்கல இசை மேடையில் மிகுவழகுன் நிகழ்வாக நடைபெற்றது.
இசைநிகழ்வின் இடையில் பல்சமய இல்லத்தின் பொறுப்பாளர் திருநிறை. தாவித் லௌயிற்வில்லெர் அவர்கள் சிறப்பு வாழ்த்தினை உரையாக அளித்தார். உங்கள் பண்பாட்டை நீங்கள் ஒழுகி அடுத்த உங்கள் தலைமுறைக்கும் சிறப்புடன் நீங்கள் பண்பாட்டை அளிக்க வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டார்.

புரட்சி எனும் பொருட்பட இளந்தமிழர்கள் நடாத்தும் மேற்கத்தைய நடனக்குழு தமிழா வழிபடு, தமிழில் வழிபடு எனும் சைவநெறிக்கூடம் படைத்த துள்ளல் இசைப்பாடலிற்கும், சைவநெறியை விளக்கும் நவீன நாட்டிய நடனத்தையும் சிறப்பாக படைத்தளித்தனர்.

நிறைவில் பறையாலி முழங்க பனிமலையில் தெய்வத் தமிழ் எனும் நாடகம் மேடையேற்றப்பட்டது. தமிழர் தொன்மைமுதல் ஈழத்தின் போர்க்காலம் முதல் புலம்பெயர்வுவரை காலத்தை எடுத்துக்காட்டி, தமிழ்ச் சமூகம், இங்கும் தாயகத்திலும், நேற்றும், இன்றும் நாளையும் எதிர்கொண்ட சவால்களையும், எதிர்கொள்ளவுள்ள சாவல்களையும் எடுத்து விளக்கும் நடாகமாக அமைந்திருந்தது.

செந்தமிழ், சிவமகிழி படைப்பில் திருமதி. ராஜ்கண்ணா சிவாஜினி அவர்களின் நெறியாள்கையில் 20 மேற்பட்ட சிறார்கள் சிறப்பாக நடித்தளித்த படைப்பாக நாடகம் அமைந்திருந்தது.

கடந்துவந்த பாதை, விலகள், கனவுகள், ஐயம் களைந்து அடுத்த தமிழ்ச்சமூகத்திற்கு நேர்த்தியாக கடத்தும் பொறுப்பு அனைத்துத் தமிழ் அமைப்புக்களுக்கும் உண்டு என கருத்தளிப்பதாகப் படைப்பு இருந்தது.
நிறைவில் நாடகத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் சிறப்புப் பரிசுகள் அளிக்கப்பட்து விழா நிறைந்தது.

யாவாரீர் யாவரும் வாரீர், யாவரும் இழுக்க தேர் விசையுடன் நகரும், திருவாசல் வந்தே தீரும் எனும் பாடல் பொருள் காதுகளில் விழா எதிரொலிக்க, அனைவருக்கும் சிறப்பு உணவு அளிக்கப்பட்டு நிகழ்வு நிறைந்தது…

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit