20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சிக்குள் பிளவு

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

suresh

மாகாணசபைகள் தொடர்பில் கொண்டு வரப்படும் 20ஆவது திருத்தச் சட்டம் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகிய ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மாகாணசபைகளின் செயற்பாடு மற்றும் அதன் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் 20ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தநிலையில் மாகாணசபைகளின் செயற்பாட்டை பாதிக்கும் எனத் தெரிவித்து வட மாகாண முதலமைச்சர் தலைமையிலான அணி அதனை எதிர்த்து வருகின்றது. அத்துடன் தென்பகுதியில் உள்ள சில மாகாண சபைகளும் அதனை எதிர்த்து வருகின்றது.

20ஆவது திருத்தச் சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கும் என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், ஊடகசந்திப்பு ஒன்றை நடத்திய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகிய ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்,

20ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரிக்க தமிழரசு கட்சியினர் எடுத்திருக்கும் நிலைப்பாட்டை ஈ.பி.ஆர்.எல்.எவ் வன்மையாக கண்டிக்கின்றது என தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழரசு கட்சியின் இத்தகைய தீர்மானம் தமிழ் மக்களை நிச்சயமாக படுகுழிக்குள் தள்ளுவதாகவே அமையும் எனவும் தெரிவித்ததுடன், ஆதரிக்க எடுத்த முடிவு தமிழரசுக் கட்சியின் தனிப்பட்ட முடிவு எனக் கூறி ஈ.பி.ஆர்.எல்.எவ் 20ஆவது திருத்தத்தை நிராகரிக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையடுத்து, கிழக்கு மாகாணசபையில் 20ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டிருந்தது. இதன்போது ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும், மத்தியகுழு உறுப்பினருமான கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்ணம் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கி அதனை நிறைவேற்றுவதற்கு உதவியிருந்தார்.

இதேவேளை, கிழக்கு மாகாணசபையில் ஈ.பி.ஆர்.எல்.எவ் தவிர்ந்த வேறு சில உறுப்பினர்கள் 20ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்த்து இருந்தனர். ஆனால் ஈ.பி.ஆர்.எல்.எவ் அதற்கு ஆதரவு வழங்கியிருந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியாகிய ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், கட்சியின் அடுத்த கட்டம் தொடர்பில் இரு அணிகளாக செயற்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit