கோத்தபாயவின் கையொப்பங்களை பரிசீலனை செய்யுமாறு உத்தரவு

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

gota-200-news

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் கையொப்பங்களை பரிசீலனை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நிதி மோசடி விசாரணைப் பிரிவு, கொழும்பு குற்றப் பதிவு பிரிவிற்கு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

டி.ஏ.ராஜபக்ச மற்றும் அவரது பாரியாரின் சமாதிகள் புனரமைப்பு பணிக்கு ஒன்பது கோடி ரூபா அரசாங்கப் பணம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிதியை பயன்படுத்தப்படுவதற்கு அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உத்தரவிட்டிருந்தார் என சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

சட்ட மா அதிபர் திணைக்களம் வழங்கிய ஆலோசனைக்கு அமைய கோத்தபாய ராஜபக்சவின் கையொப்பங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட உள்ளன.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகள் கிடைக்கப் பெற்றதன் பின்னர், கோத்தபாய ராஜபக்சவிடம் வாக்கு மூலமொன்று பதிவு செய்யப்பட உள்ளதாக நிதி மோசடி விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பெற்றோரான டி.ஏ.ராஜபக்ஸ மற்றும் அவரது பாரியாரின் சமாதிகளும் அதனை அண்டிய பகுதியும் புனரமைக்கப்பட்டு அலங்காரப்படுத்தப்படுவதற்கு அரச பணம் செலவிடப்பட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் அம்பலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit