இன்று முதல் விற்பனைக்கு வரும் 24 எம்பி செல்ஃபி கேமரா கொண்ட விவோ V7 பிளஸ் ஸ்மார்ட்போன்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இன்று முதல் விற்பனைக்கு வரும் 24 எம்பி செல்ஃபி கேமரா கொண்ட விவோ V7 பிளஸ் ஸ்மார்ட்போன்

புதுடெல்லி:

விவோ நிறுவனம் செப்டம்பர் 9-ம் தேதி அறிமுகம் செய்த V7 பிளஸ் ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று முதல் துவங்குகிறது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் விற்பனை செய்யப்படும் விவோ V7 பிளஸ் விலை இந்தியாவில் ரூ.21,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விவோ V7 பிளஸ் ஸமார்ட்போனினை ஆன்லைனில் வாங்குவோர், அமேசான், ப்ளிப்கார்ட் மற்றும் டாடா கிளிக் வலைத்தளங்களில் வாங்கிட முடியும். இந்தியாவில் கோல்டு, மேட்டர் பிளாக் மற்றும் ரோஸ் கோல்டு நிறத்தில் வெளியிடப்பட்டது. புதிய விவோ ஸ்மார்ட்போனில் 24 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விவோ V7 பிளஸ் சிறப்பம்சங்கள்:

– 6.0 இன்ச் IPS LCD, 1440×720 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
– அட்ரினோ 506 GPU
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் சார்ந்த ஃபன்டச் OS 3.2
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
– 24 எம்பி செல்ஃபி கேமரா
– 3225 எம்ஏஎச் பேட்டரி
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

சிறப்பான புகைப்படங்களை எடுக்க ஏதுவான கேமரா கொண்டுள்ள விவோ V7 பிளஸ் ஸ்மார்ட்போனின் செல்ஃபி கேமராவில் f/2.0 அப்ரேச்சர், 1/2.78-இன்ச் சென்சார், மூன்லைட் க்ளோ மற்றும் செலஃபி லைட் உள்ளிட்ட அம்சங்ள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் செல்ஃபி கேமரா கொண்டு 1080 பிக்சல் தரத்தில் வீடியோக்களை பதிவு செய்ய முடியும். இதேபோல் பின்புற கேமராவில் எல்இடி பிளாஷ் வசதி மற்றும் 1080 பிக்சல் தர வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

புதிய விவோ ஸ்மார்ட்போனினை வாங்குவோருக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் குறைந்த காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு திரை பழுதானால் சரி செய்யும் வசதியும், தேர்வு செய்யப்பட்ட வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை கொண்டு வாங்கும் போது 5 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*