20 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி!

பிறப்பு : - இறப்பு :

உத்தரபிரதேசம் மராட்டியத்தை தொடர்ந்து ராஜஸ்தானில் விவசாய கடன் ரூ.20 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக, வேளாண்மை அமைச்சர் பிரபுலால் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களான உத்தரபிரதேசம் மராட்டியத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருந்தது.

உத்தரபிரதேசத்தில் ரூ.36 ஆயிரம் கோடிக்கும், பமராட்டியத்தில் ரூ.34 ஆயிரம் கோடிக்கும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்து அம்மாநில முதல் அமைச்சர்களான யோகி ஆதித்ய நாத், தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டு இருந்தனர்.

உத்தரபிரதேசம் மராட்டியத்தை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்திலும் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கும் வசுந்தரா ராஜே தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.

ரூ.50 ஆயிரம் வரை விவசாயகடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.20 ஆயிரம் கோடி விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் மாநில வேளாண் அமைச்சர் பிரபுலால் தெரிவித்துள்ளார்.

விவசாய பயிர் கடன்களை தள்ளபடி செய்யக்கோரி அம்மாநில விவசாயிகள் கடந்த 1ஆம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து 14 மாவட்டங்களில் போராட்டம் தீவிரமானது. இதன் காரணமாக ராஜஸ்தான் மாநில பாரதிய ஜனதா அரசு விவசாய கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit