சிறுவர் பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட 4 லட்சம் பணத்திற்கென்ன ஆனது – பாடசாலை சமூகம் கேள்வி?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கிளிநொச்சி சிவபாதகலையகம் பாடசாலைக்கு சிறுவர் பூங்கா அமைக்க ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களால் ஒதுக்கப்பட்ட 4 லட்சம் பணத்திற்கென்ன ஆனது என பாடசாலை சமூகம் கேள்வி எழுப்பியுள்ளது. பாடசாலை வள பற்றாக்குறை தொடர்பில் ஊடகங்களில் பரவலாக செய்தி வந்த நிலையில் குறித்த பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்ட ராஜாங்க அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து சிறுவர் பூங்கா அமைப்பதற்கு 4 இலட்சம் ரூபா ஒதுக்கியிருந்தார்.

குறித்த நிதி கரைச்சி பிரதேச செயலகம் ஊடாக செலவு செய்யப்பட்டது. எனினும் குறித்த பணத்தில் முழுமைப்படுத்தாத நிலையிலேயே சிறுவர் விளையாட்டு முற்றம் காணப்படுவதாக பாடசாலை சமூகம் கவலை தெரிவிக்கின்றது.

பாடாலையின் வளர்ச்சிக்கு எவரும் உதவ முன்வராத நிலையில், இவ்வாறு ஒதுக்கப்பட்ட பாரிய நிதிக்கென்ன ஆனது என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். பாடசாலையில் தொடரும் வள பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ய அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாடசாலை சமூகம் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*