கழிவுப்பொருட்களை அகற்றும் பணிகள் வழமைக்கு!

பிறப்பு : - இறப்பு :

நாடு முழுவதிலும் கழிவுப்பொருட்களை அகற்றும் பணிகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக, தேசிய திண்மக்கழிவு மத்திய நிலையத்தின் பணிப்பாளர் டி.இலங்க சிங்க தெரிவித்துள்ளார்.

திண்மக்கழிவுகளை வகைப்படுத்தி அகற்றுவதற்கு பொதுமக்களும் உள்ளூராட்சி மன்றங்களும் ஊக்குவிக்கப்பட்டுவருவதாக குறிப்பிட்ட அவர்,

கழிவுப்பொருட்களை சேதனப்பசளையாக மாற்றியமைக்கும் திட்டம் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டினார்.

இதேவேளை கரவலப்பிட்டியில் தற்பொழுது சேதனப் பசளை தயாரிப்பு நிலையம் செயற்பட்டு வருவதுடன் அங்கு மற்றுமொரு மத்திய நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான கட்டிட நிர்மாணப்பணிகள் இவ்வருடத்தில் நிறைவடையவுள்ளதாகவும் டி.இலங்க சிங்க தெரிவித்துள்ளார்.

இயந்திரங்கள் பொருத்தப்பட்ட பின்னர் நாளாந்தம் 50 மெற்றிக்தொன் கழிவுப்பொருட்களைக் கொண்டு சேதனைப்பசளை தயாரிக்கமுடியும் என்றும் தேசிய திண்மக்கழிவு மத்திய நிலையத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit