திருமணங்களில் தோற்றேன்: ஒரு நடிகையின் வாக்குமூலம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

குடும்ப வாழ்க்கை சிறப்பாக இல்லையென்றாலும், சினிமாவில் ஜொலிப்பது எனக்கு மன நிம்மதியை அளிக்கிறது என கூறுகிறார் நடிகை சாந்தி கிருஷ்ணா.

16 வயதில் பன்னீர்புஷ்பங்கள் சினிமாவில் அறிமுகமான இவர், 19 வயதில் நடிகர் ஸ்ரீநாத்தை திருமணம் செய்துவிட்டு சினிமாவில் இருந்து விடைபெற்றார்.

26 வயதில் மம்முட்டியின் கதாநாயகியாக மீண்டும் நடிக்கவந்தார். அதை தொடர்ந்து முதல் திருமணம் முறிந்தது. அடுத்து தொழிலதிபர் ஒருவரை மறுமணம் செய்துகொண்டு, மீண்டும் சினிமாவில் இருந்து விலகினார்.

அந்த வாழ்க்கையும் வெகுகாலம் நீளவில்லை. பிரிவு ஏற்பட்டது. தற்போது பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மகன் மிதுல், எட்டாம் வகுப்பு படிக்கும் மகள் மிதாலி ஆகியோருடன் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

தனது வாழக்கை அனுபவம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டது, நான் சினிமாவுக்கு வந்தது எதிர்பாராமல் நடந்து ஒன்று. நான் பிசியாக இருந்தபோது 19 வயதில் எனக்கு திருமணம் நடந்தது.

அந்த தருணத்தை இப்போது கூட என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. மும்பையில் வசித்து வந்த நான் திருமணத்துக்கு பின்னர் ஒரு குக்கிராமத்தில் வாழ்ந்தேன்.

வீட்டில் கேஸ் கூட கிடையாது, போன் வசதி கிடையாது. ஒரு கிராமத்து பெண்ணாக வீட்டுக்குள் முடங்கி கிடந்தேன், திருவனந்தபுரத்துக்கு குடிசென்ற பிறகு படவாய்ப்புகள் வரத்தொடங்கின.

ஆனால், சினிமாவில் நடிக்க சென்றால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படும் என எனது கணவர் தடுத்துவிட்டதால், நடன பள்ளி ஆரம்பித்தேன், அது தோல்வியில் முடிந்து.

அப்போது நடந்த பிரசவத்தில் குழந்தை இறந்தது, மனஅழுத்தத்தில் இருந்தேன், அந்த நேரத்தில் சினிமா வாய்ப்பு வந்தது, ஏற்றுக்கொண்டேன். நான் கண்ணீர்விடும்போதெல்லாம் சினிமா அழைப்பு வந்து என் கண்ணீரை துடைத்திருக்கிறது.

முதல் படத்தில் அறிமுகமாகும்போதுதான் நான் மகிழ்ச்சியாக சினிமாவிற்கு வந்தேன். இரண்டாம் முறையும், மூன்றாம் முறையும் நான் வந்தபோது என் வாழ்க்கையில் கவலையும் கண்ணீரும்தான் நிரம்பியிருந்தது.

முதல் திருமண வாழ்க்கை முறிவடைந்து விட்டதால், இரண்டாவது திருமணம் செய்துகொள்ளும்போது மிகவும் கவனத்தில் இருந்தேன்.

அதில், பிரிவே இருக்ககூடாது என நினைத்துதான் திருமண பந்தத்தில் இணைந்தேன், ஆனால் அதுவும் தோல்வியில் முடிந்துவிட்டது.

எனது வாழ்நாளில் பல்வேறு முடிவுகளில் இதயத்திலிருந்தே எடுப்பதால் தான் தோல்விகளை சந்தித்தேன். என் தனிப்பட்ட வாழ்க்கையில் அனைத்தும் தவறாக அமைந்தாலும், எனக்கு 2 குழந்தைகள் கிடைத்தது நான் செய்த அதிர்ஷ்டம்.

தற்போது திரைவாழ்க்கையில் தான் கவனம் செலுத்தி வருகிறேன், 3வது திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை. நம் வாழ்வில் நினைத்தது போன்று எதுவும் நடப்பதில்லை என கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*