பத்ம பூஷன் விருதுக்கு பரிந்துரைக்கப்படாதது ஏன் ? : சாய்னா நேவால் கடும் அதிருப்தி

பிறப்பு : - இறப்பு :

பத்ம பூஷன் விருதுக்கு, ஒலும்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா நேவாலின் பெயரை பரிந்துரை செய்வதை மத்திய விளையாட்டுத் துறை நிராகரித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக சாய்னா நேவால் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இந்திய பாட்மிண்டன் சம்மேளனம், சாய்னா நேவாலின் பெயரை 201ம் ஆண்டுக்கான பத்ம பூஷன் விருதுக்கு பரிந்துரைத்து மத்திய விளையாட்டுத் துறைக்கு அனுப்பியிருந்தது. ஆனால், இரு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமாரையே தெரிவு செய்துள்ள மத்திய விளையாட்டுத் துறை சாய்னாவின் பெயரை நிராகரித்துள்ளது.

சாய்னா நேவால் கடந்த 2010ம் ஆண்டு பத்ம சிறீ விருதை வென்றிருந்தார். இதனால் ஐந்துவருடங்கள் கழித்தே அவர் இன்னுமொரு பத்ம விருதுக்கு விண்ணபிக்க முடியும். இதனடிப்படையில் கடந்த வருடமும் அவர் பெயர் பரிந்துரையிலிருந்து நிராகரிக்கப்பட்டது. இதனால் இம்முறை அவர் பரிந்துரைத்தார். ஆனால் சுஷில் குமார் ஐந்துவருட காத்திருப்பின்றி உடனடியாக மற்றுமொரு பத்ம விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். தான் தொடர்ச்சியாக நிராகரிக்கப்படுவது ஏன் என சாய்னா நேவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதோடு சுஷில்குமாருக்கும் தனக்கும் என சேர்த்து இருவருக்கும் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டாலும் தான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். தனது பெயர் மாத்திரம் நிராகரிக்கப்படுவது மிகுந்த ஏமாற்றத்தை தருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பேட்மிண்டனில் முதலாவது ஒலிம்பிக் மேடல், காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கம், அதோடு பல சூபர் சீரிஸ் டைட்டில் பட்டம் என சர்வதேச தரவரிசையில் முன்னணி பேட்மிண்டன் வீராங்கணைகளில் ஒருவராக மிளிரும் சாய்னா நேவாலுக்கு தற்போது தான் 24 வயதாகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit