ஜம்மு காஷ்மீர் எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் : ஒருவர் பலி, 1000 க்கு மேற்பட்டோர் வெளியேற்றம்

பிறப்பு : - இறப்பு :

நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காதுவா மற்று சம்பா மாவட்டங்களில் பாகிஸ்தான் எல்லைப் படையினர் அத்துமீறி உள்நுழைந்து நடத்திய கனரக துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஒரு பெண் உயிரிழந்துள்ளதுடன், 8 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

மேலும் இந்திய எல்லைப் புற கிராமங்களிலிருந்து 1000க்கு மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

புதுவருடத்திற்கு முதல் நாளிரவு பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில், இருவர் கொல்லப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் இந்திய இராணுவ வீரர் ஆவார். பதிலுக்கு இந்தியா நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஐந்து பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

இதையடுத்தே தொடர்ந்து இரு படையினருக்கும் இடையில் தாக்குதல் அதிகரித்துள்ளதுடன் பதற்றம் தொடர்கிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit