12,000 ரன்களை எட்டி சங்கக்கார புதிய சாதனை

பிறப்பு : - இறப்பு :

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மிகக் குறைந்த இன்னிங்சுகளில் 12,000 ரன்களை எடுத்து இலங்கையின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்கார புதிய சாதனை புரிந்துள்ளார்.

குமார் சங்கக்கார டெஸ்ட் போட்டிகளில் 12,000 ரன்களை எடுக்கும் ஐந்தாவது வீர்ர் இவர். தன்னுடைய 224 ஆவது இன்னிங்சில் அவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்துள்ள சச்சின் டெண்டூல்கரும், ஆஸ்திரேலிய அணியின் ரிக்கி பாண்டிங்கும் தம்முடைய 247 ஆவது இன்னிங்சில்தான்12,000 ரன்களைக் கடந்தனர்.
இவர்களைத் தவிர இந்தியாவின் ராகுல் டிராவிட்டும் தென் ஆப்பிரிக்காவின் ஜாக் காலிஸ்சும் 12,000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர்.

தற்போது 37 வயதாகும் சங்கக்கார, நியுசிலாந்துக்கு எதிராக வெல்லிங்டன்னில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்சிஸ் 12,000 ரன்களைக் கடந்து சென்றார்.
இதுவரை 130 டெஸ்ட் போட்டிகளில் பங்குபெற்றுள்ள சங்கக்கார 37 சதங்களையும், 51 அரைச் சதங்களையும் அடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த இலங்கை வீரரும் இவரே.
இந்தப் போட்டியில் முதலில் ஆடிய நியுசிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தில் 221 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணியும் தன்னுடைய இன்னிங்சை மோசமாகத்தான் துவக்கியது. ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெறும் 78 ரன்களை மட்டுமே இலங்கை எடுத்துள்ளது. சங்கக்கார 33 ரன்களை எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளார். இந்தப் போட்டித் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் நியுசிலாந்து வெற்றிபெற்றுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit