லார்ட்ஸ் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் 177 ரன்னில் ஆல்அவுட்; இங்கிலாந்து வெற்றிக்கு 107 ரன்கள் இலக்கு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

லார்ட்ஸ் டெஸ்டில் 2-வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 177 ரன்னில் சுருண்டதால் இங்கிலாந்து வெற்றிக்கு 107 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லார்ட்ஸ் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் 177 ரன்னில் ஆல்அவுட்; இங்கிலாந்து வெற்றிக்கு 107 ரன்கள் இலக்கு
இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 123 ரன்னில் சுருண்டது. பென் ஸ்டோக்ஸ் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 194 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பென் ஸ்டோக்ஸ் 60 ரன்கள் எடுத்தார். ரோச் 5 விக்கெட்டும், ஹோல்டர் 4 விக்கெட்டும் வீழ்த்தினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி 71 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஜேம்ஸ் ஆண்டர்சனின் அபார பந்து வீச்சால் மூன்றாவது நாளான இன்று 177 ரன்னில் சுருண்டது. ஷாய் ஹோப் 62 ரன்னும், பாவெல் 45 ரன்னும் எடுத்தனர். ஆண்டர்சன் 7 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

இங்கிலாந்தை விட வெஸ்ட் இண்டீஸ் 106 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 107 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை விளையாடி வருகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*