வடக்கு ஈராக்கிலிருந்து 170 பேரைக் கடத்திச் சென்றது ISIS

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமது அமைப்பின் கொடியை எரித்ததற்குத் தண்டனையாக வடக்கு ஈராக்கில் இருந்து 170 ஆண்களை ISIS போராளிக் குழு கடத்திச் சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கிர்குக் மாகாணத்திலுள்ள அல்-ஷஜாரா மற்றும் காரிப் போன்ற கிராமங்களில் தமது இயக்கத்தின் இரு கொடிகளை எரித்த குற்றத்துக்காக இன்று சனிக்கிழமை நூற்றுக் கணக்கான இந்த ஆண்களும் கடத்தப் பட்டதாக AP ஊடகத்துக்கு ஈராக்கின் புலனாய்வு அதிகாரி ஒருவர் தகவல் அளித்துள்ளார்.

மேலும் இந்த 170 ஆண்களும் ஹவிஜா நகருக்கு அண்மையில் இருந்து 30 வாகனங்களில் கடத்திச் செல்லப் பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இப்பகுதியில் ISIS இயக்கத்தால் கிராமத்து இளைஞர்கள் கடத்தப் படுவது இதுவே முதற் தடவை அல்ல என்பதுடன் ஜூனில் தாம் கைப்பற்றி இருந்த வட ஈராக்கின் பகுதியில் இருந்து ஏற்கனவுவே பல தடவைகள் ISIS இயக்கம் இச்செயலில் ஈடுபட்டு வருகின்றது.

செப்டம்பரிலும் தமது கோட்டைகளில் ஒன்றையும் கொடியையும் அழித்த குற்றத்துக்காக கிர்குக்கில் இருந்து 50 பேரையும் அதற்கடுத்த வாரம் 20 பேரையும் ISIS கடத்திச் சென்றிருந்தது. ஈராக்கிலும் சிரியாவிலும் ஆயிரக் கணக்கான மக்கள் ISIS இனால் மரண தண்டனை அளிக்கப் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது..

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*