விக்கி வடக்கில் சிங்களவரை எதிர்ப்பது ஏன்?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கொழும்­பில் கற்று பல வரு­டங்­க­ளாக சிங்­க­ள­வர்­க­ளு ­டன் வாழ்ந்த வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ ­ரன், வடக்­கில் சிங்­க­ள­வர்­க ­ளுக்கு இட­மில்லை என்று கூறு­கின்­றார்.

அவ்­வாறு தெரி­விப்­ப­தற்கு அவர் யார் ? இவ்­வாறு கேள்வி எழுப்­பி­யுள்­ளார் ரியர் அட்­மி­ரல் சரத் வீர­சே­கர.

முன்­னாள் பாது­காப்பு அமைச்­சின் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்ச தலை­மை­யில் கடந்த புதன் கிழமை, வெளிச்­சம் அமைப்­பின் ஆரம்ப நிகழ்வு நடை­பெற்­றது.

அதில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய சரத் வீர­சேக மேலும் தெரி­வித்­த­தா­வது:

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ ­ரன், நாக­தீ­பத்­தில் விகாரை அமைப்­ப­தற்கு எதிர்ப்பு தெரி­விக்­கின்­றார்.

வடக்­கில் புத்­தர் சிலை வைப்­ப­தற்கு கிளி­நொச்­சி­யில் ஊர்­வ­லம் செல்­கின்­றார்­கள். இந்த நாட்­டில் உள்ள அனை­வ­ருக்­கும் எந்த இடத்­திற்­கும் சென்று நிம்­ம­தி­யாக வாழ வேண்­டும் என்­பதே எமது முக்­கிய கட­மை­யாக இருந்­தது. தற்­போது வடக்­கில் சிங்­க­ள­ வர்­கள் வாழ்­வ­தற்கு எந்த உரி­மை­யும் இல்லை என்று விக்­னேஸ் ­வ­ரன் தெரி­விக்­கின்­றார்.

விக்­னேஸ்­வ­ரன் யார்? கொழும்­பில் ரோயல் கல்­லூ­ரி­யில் கல்வி கற்று, பல வரு­டங்­க­ளாக சிங்­க­ள­வர்­க­ளு­டன் வாழ்ந்து விட்டு தற்­போது வடக்­கிற்­குச் சென்று சிங்­க­ள­வர்­க­ ளுக்கு இங்கு இட­மில்லை என்று கூறு­கின்­றார்.

சிங்­கள இளை­யோரை திரு­ம­ணம் செய்து கொள்ள வேண்­டாம் என்று வடக்­கில் உள்ள தமிழ் இளை­யோ­ருக்கு அறி­வுரை வழங்­கு­கின்­றார். ஆனால் இவ­ரது இரு புதல்­வர்­க­ளும் திரு­ம­ணம் முடித்­தி­ருப்­பது சிங்­கள இளை­யோ­ரைத்­தான் என்­பதை அவர் மறந்து விட்­டார் – – என்­றார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*