இறக்காமத்தில் வைக்கப்பட்ட சிலைக்கும் மு.காவுக்கும் தொடர்பா ?

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

qw

அம்பாறை மாவட்ட மக்களின் எந்தவித அடிப்படை உரிமைகளையும் பெற்றுகொடுக்க அம்பாறை மாவட்ட அரசியல் முதுசங்கள் முன்வராமலிருப்பது ஏன் ? அம்பாறை மாவட்ட மக்களின் அதிக வாக்குகளை பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் ஐக்கிய தேசிய கட்சியின் இரண்டு பிரதியமைச்சரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரும் இந்த நல்லாட்சி உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து இதுவரை அம்பாறை மாவட்ட மக்களுக்கு பெற்றுக்கொடுத்த உரிமைகள் என்ன?

என அல்மீசான் பௌண்டசன் தலைவர் அல்ஹாஜ் நூறுல் ஹுதா உமர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் கேள்விஎழுப்பியுள்ளார். மேலும் தனது அறிக்கையில்

இந்த நல்லாட்சி அரசினை கொண்டுவர மேடைக்கு மேடை உரிமைகோசம் விடுத்த மக்கள் காங்கிரசும், முஸ்லிம் காங்கிரசும் அம்பாறை மாவட்ட மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்வதே தொழிலாக கொண்டு இயங்கிகொண்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் அசைக்க முடியாத இடத்தை தக்கவைத்துகொண்டிருந்த முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்கள் சகல விடயங்களுக்கும் தடங்கலாக இருப்பதாகவும் அபிவிருத்திகளை தடுப்பதாகவும் குறைகூரித்திரிந்த முஸ்லிம் காங்கிரசின் எம்.பிக்களும், மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் இப்போதும் எந்தவித உரிமைகளையும் பெற்றுக்கொடுக்காது உயிரற்ற ஜனாஸாக்கள் போன்று இருப்பது அவர்களின் கையாலாகாத தன்மையை காட்டுகிறது.

மஹிந்த அரசில் பொதுபலசேனா எனும் தீவிரவாத அமைப்பின் அட்டூழியங்கள் அம்பாறைக்கு வருகைதராமல் இருந்தமைக்கு காரணமாக முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் எனும் ஆளுமையே காரணமாக இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. இறக்காம (மாணிக்கமடு) கொல்லிமலையில் வைக்கப்பட்ட சிலை இன்னும் ஒருவாரத்தில் அகற்றப்படும் அதற்காக ஜனாதிபதியும்,பிரதமரும் வாக்குறுதியளித்துள்ளனர் என மு.கா தலைவரும் ஐ.தே.கட்சியின் முக்கியஸ்தருமான அமைச்சர் ஹக்கீம் அவர்கள் அவசரமாக ஹெலியில் வந்து பள்ளிவாசலில் வைத்து கூறிவிட்டு சென்றார்.

அம்பாறையில் இழந்த செல்வாக்கை மீளப்பெற இந்த சிலைவைப்புக்கும் மு.காவுக்கும் நேரடி தொடர்பு இருக்கலாம் என சந்தேகங்களும் இப்போது வலுவாக ஆரம்பித்துள்ளது. இதற்க்கு காரணமாக சிலைவைத்த இடத்தில் பௌத்த கடும்போக்காளர்கள் வருகைதந்த செய்தி இறக்காம மக்களுக்கு சென்று சேர்வதற்க்கு முன்னர் மு.கா பிரமுகர்களுக்கு தெரியவருவதும் சில நிமிடங்களிலையே அவர்கள் ஸ்தலத்தில் நிற்பதும் சந்தேகத்தை வலுவாக்குகிறது.

அத்துடன் இந்த சிலை வைப்பு சம்பவம் நடந்த போது மு.கா தலைவரின் பேச்சில் இருந்த தடுமாற்றம், கிழக்கு மாகாண ஆட்சி மு.கா வசமிருந்தும் இந்த விடயத்தில் பொடுபோக்கு, அம்பாறை மாவட்டத்தில் வசிக்கும் கட்சியின் அதிமுக்கிய பதவிக்கு சொந்தக்காரர்களின் மௌனம், என்பன சந்தேகத்தை இன்னும் உறுதியாக்குகிறது. சிலை வைக்கப்பட்டு வருடங்கள் கழிந்து பல மாதங்கள் ஆகியும் சிலை உறுதியாகிக்கொண்டே செல்கிறதே தவிர அங்கிருந்து அகற்ற முடியாமல் இருக்கிறது. இதை வைத்து எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் மு.கா பிரச்சாரம் செய்தால் அது வேடிக்கை இல்லை அந்த கட்சியின் வங்கரோத்து நிலையே. மரியாதையுள்ள கட்சியாக இருந்தால் தமது இயலாமையை பகிரங்கமாக ஒத்துக்கொண்டு மக்களிடம் மன்னிப்புக்கேட்டுவிட்டு தமது அமைச்சுக்களை இராஜினமா செய்துவிட்டு எதிரணியில் இருந்து குரல்கொடுக்க வேண்டும்.

இந்த நல்லாட்சியை ஆதரிக்க பலகோடிக்களை வாங்கிகொண்டு (கோடி வாங்கிய செய்தி என்னுடையதல்ல அக்கட்சியின் முன்னாள் தவிசாளர் மற்றும் முக்கியஸ்தர்கள் தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகளுக்கு வழங்கிய செவ்வியை அடிப்படையாக கொண்டதே) மக்களை உசுப்பிவிட்டு அம்பாறைக்கு இருந்த சக்திமிக்க அமைச்சுப் பதவியை இல்லாதொழித்த மு.காவும், மக்கள் காங்கிரசும் இப்போதும் கண்டும் காணாமல் இருப்பது ஏன் ?

சுனாமியால் தனது சகல உடமைகளையும்,உயிர்களையும் இழந்த முஸ்லிம் மக்களுக்கு சவூதி அரசின் நன்கொடையில் கட்டப்பட்ட நுரைச்சோலை வீட்டுத்திட்டம் காடாக பிரகடனம் செய்ய முன்னர் அதனை மீட்டுக்கொடுக்க வேண்டியவர்கள் யார் ? இப்போதும் அதாவுல்லாஹ் தடுக்கிறாரா??

பொத்துவில் மக்களின் குடிநீரை வழங்கி முடித்துவிட்டீர்களா ? இப்போதும் கொடுக்க முடியாதவாறு அதாவுல்லாஹ் தடுக்கிறாரா??
சாய்ந்தமருதில் இருந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எப்போது எங்கள் பூமிக்கு திரும்பும்? நிரந்தர கட்டிடத்தில் இளைஜர்களின் தேவைக்காக சாய்ந்தமருதில் இயங்கிய மாகாண காரியாலய இடமாற்ற எப்போது மீண்டும் அந்த இடத்துக்கு வரும்?

உள்ளுராட்சி சபை கோஷத்தை காட்டி தேர்தலில் வாக்குபிச்சை கேட்டு இனியும் ரோசமில்லாது சாய்ந்தமருதுக்கு முஸ்லிம் கட்சிகள் வந்தால் உங்களை மக்கள் தெருநாயை துரத்துவதுபோல துரத்த மாட்டார்கள் என்பதில் என்ன நிச்சயம் ??

காரியப்பர்,மன்சூர்,அஸ்ரப் காலத்தில் நடந்த அபிவிருத்திக்கு பின்னர் மு.காவின் தாயகம் கல்முனை கண்ட அபிவிருத்தி என்ன ??

இப்படியான பல்லாயிரக்கணக்கான கேள்விகளுடன் உங்களை ஆதரித்து சொகுசு வாழ்க்கைக்கு அனுப்பிய மக்களின் வரிப்பணத்தில் வயிறுவளக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் அம்பாறை மாவட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவிட்டு வாக்குபிச்சைக்கு வரவேண்டுமே தவிர வாக்களியுங்கள் செய்துதருகிறோம் என கூறிக்கொண்டு வருவது முழுநிர்வாணமாக நடமாடுவது போன்றதாகும். இஸ்லாம்,குரான், ஹதீஸ் போன்ற சொற்களுடன் அரசியல் செய்கின்ற தகுதியை இழந்துள்ள முஸ்லிம் கட்சிகள் மரணவயதை அடைந்து கொண்டிருக்கும் நீங்கள் இனியாவது அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.

பாராளுமன்றத்தில் ஒருகதையும் சமூக வலைதளங்களில் ஒருகதையும் மேடைகளில் ஒருகதையும் கூறித்திரியும் அரசியல்வாதிகளை அடையாளம் கண்டு பாடம் கற்பிக்க இனியாவது மக்கள் முன்வரவேண்டும் என தனது அறிக்கையில் சுற்றிகாட்டியுள்ளார்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit