சுவிற்சர்லாந்து வலே மாநிலத்தில் மர்த்தனியில் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் திருவிழா (காணொளி இணைப்பு)

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

martignygnanalingather-18

அடிபேரிற் பாதாளம் பேரும் அடிகள்
முடிபேரில் மாமுகடு பேரும் – கடகம்
மறிந்தாடு கை பேரில் வான்திசைகள் பேரும்
அறிந்தாடும் ஆற்றா தரங்கு

இறைசக்தி மிகப் பெரியது. இறைவன் நடனமாடும் போது இறைவன் அடி, முடி, கை முதலியன ஏழு உலகங்களில் மட்டும் அடங்கிக் கிடப்பன அல்ல. இவை அவ்வுலகங்களைக் கடந்தும் செல்வன. இறைவன் அடியும், முடியும், மேலும், கீழும் உழன்று தாக்கி, அரங்கு ஆற்றாது என்று கூறுவதன் வாயிலாக இறை சக்தியின் ஆற்றல் நமக்கு உணர்த்தப்படுகிறது என்கிறார் காரைக்கால் அம்மையார்.

உயிர்கள் ஆணவ இருளில் மூழ்கித் தங்கள் நிலை தெரியாது கிடக்கும் போது உயிர்களை விட்டு இறைவன் பிரியாது நின்று, அவைகளைச் செந்நெறிப்படுத்தி இயக்க வேண்டியே இருளில் ஒளியாய் நின்று ஆடுகின்றான். இதுவே ஆட்டத்தின் தத்துவம், சிவபெருமான் ஞானலிங்கேச்சுரர் உயிர்கள் மீது வைத்துள்ளது இரக்கம் இதுவே என்பதையும்

‘இங்கிருந்து சொல்லுவதென் எம்பெருமான் எண்ணாதே
எங்கும் பலி திரியும் எத்திறமும் – பொங்கிரவில்
ஈம வனத்தாடுவதும் என்னுக்கென் றாராய்வோம்
நாமவனைக் காணலுற்ற ஞான்று’

என்றும் சைவத் தமிழ் காரைக்கால் அம்மையார் சிவபக்திக்கு விளக்கமும் அளித்துள்ளார். தெய்வத் தமிழில் உயிரியல் மெய்யை உணர்ந்து பாடிய பாக்களைக்கொண்டு சைவநெறிக்கூடமும் 1994ம் ஆண்டு முதல் சுவிற்சர்லாந்தில் சைவத்தமிழ்ப்பணி ஆற்றி, 2007ம் ஆண்டு முதல் கருவறையில் தெய்வத் தமிழ் ஒலிக்கும் திருக்கோவிலை ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் திருக்கருணையால் அறங்காவல் செய்து வருகிறது.

சுவிற்சர்லாந்தில் 50 000 மேற்பட்ட சைவத்தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் காரைக்கால் அம்மையாரின் பாடற் பொருளாக பக்தி ஒளியாக இறைவன் மர்த்தினியில் தோன்றத் திருவெண்ணம் கொண்டு, சைவமும் தமிழும் போட்டியை மர்த்தினியில் சைவநெறிக்கூடத்தால் நடாத்தப்பணித்து, 2015ம் ஆண்டு 6ம் மாதம் 21 நாள் முதல் முழுமையாக தனக்குத் திருக்கோவில் அமைத்து எழுந்து தமிழால் அருளாட்சி புரிந்து வருகிறான்.

சுவிற்சர்லாந்து நாட்டில் கொஞ்சு பிரெஞ்சுமொழி பேசும் வலே மாநிலத்தில் 150 உட்பட்ட தமிழ்க்குடும்பங்கள் கூடிவாழும் மர்த்தினி நகரில் இவ் ஆண்டு இரண்டாவது தடவையாகத் திருவிழா நடைபெற்று வருகிறது.

கடந்த 06. 09. 2017 முதல் 12. 09. 2017 வரை பொற்றடை அழகொப்பனைத் திருவிழா மிகுசிறப்புடன் நடைபெற்று 09. 09. 2017 சனிக்கிழமை முதற்தடவையாக மர்த்தினி நகரில் திருத்தேரில் வெண்பிறையோன் ஞானலிங்கப்பெருமான், பேரரசி ஞானாம்பிகையுடன் திருவுலாவர மிகுவருள் நிறைந்துள்ளது. நாளை 10. 09. 2017 திருமுழுக்கு விழா (தீர்தத்திருவிழா), மறுநாள் திருக்கல்யாணமும் அதற்கு அடுத்து வைரவர் பெருஞ்சாந்தி விழாவும் நடைபெறவுள்ளது.

மர்த்தினிநகரின் ஊராட்சி மன்ற உறுப்பினர்களும், நகரசைபத் தலைவர் உறுப்பினர்களும் வலே மாநில சைவநெறிக்கூடத்தின் அழைப்பினை ஏற்று தேர்த்திருவிழாவிற்கு வருகை அளித்திருந்தனர். அவர்கள் தேர் முன்றலில் திருக்கோவில் அறங்காவல்சபை உறுப்பினர்களால் மதிப்பளிக்கப்பட்டனர்.

பேர்ன் சைவநெறிக்கூடம், ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர்கள் ஞானாம்பிகை அவிரொளி. திருச்செல்வம் முரளிதரன், சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் ஆகியோருடன் மர்த்தினி ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர்கள் சிவநெறிச் செல்வர். இரத்தினசபாபதி பாலகுமாரன், சிவத்திரு. கனகரத்தினம் பகீரதன், சிவத்திரு. கணேசமூர்த்தி விஜயகுமார் ஆகியோர் விழாக்காலச் சடங்குகளை செந்தமிழ்த் திருமறையில் ஆற்றினர்.

ஈழத்தில் இருந்து வருகை அளித்துள்ள மதுசூதனன் இசைக்குழுவினர் விழாக்கால மங்கல இசையினை வழங்கிச் சிறப்பித்தனர்.

எவ்வுலகும் அளிக்கும் இயல்புடையன் உலகுக்கெல்லாம் ஒப்பற்ற தலைவனாய் உள்ளவன் சிவன் ஞானலிங்கப்பெருமான் புகழும், தமிழுக்கு ஒப்பற்ற தலைவனாய் விளங்கியவன் புகழும்பாடி, காவடிகள் ஆட இயற்கையை உடலாகக் கொண்டவன். இறைவனுடைய சிறப்புகளை மர்த்தினி மலை எடுத்துரைக்க இறைமைக் குணங்களும் இயலிசை, நாடகம், முத்தமிழாக ஒழுக, ஈகைக் குணம் உடையவன் சிவன் முன்றலில் சிவஞானசித்தர்பீடத்தில் பல நாள் பணிந்து இரந்தால், மெய்கூலிகிடைக்கும் எனும் பொருள் விளங்க, தமிழால் காதலாகிக் கசிந்துருகி திருத்தேர் மர்த்தினியில் வந்த அழகுக்காட்சி, நற்தமிழ்ச்சமூகம் சைவமும் தமிழும் ஒழுகி சிறந்து விளங்கி வாழும் என்பதற்கு சான்று விளங்குவாதாய் அமைந்துள்ளது.

தேரில் இருந்து பெருமான் பச்சை அணிந்து கீழிறங்கி திருக்கோவிலுக்குள் நுழைந்ததும் மர்த்தினி வாழ் இளந்தமிழ்ச் செல்வங்கள் இசைவேள்வி நடாத்தினர். மங்கல இசைவழங்கிய கலைஞர்ளும் இதில் இணைந்தனர். திருநிறை. இராசையா மகேஸ் அவர்களின் மாணவர்களின் கலைத்திறன் ஞானாம்பிகை இடைக்கண் அருளாக ஒலித்தது.

இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க, விளங்குக சைவமும் தமிழும் எனும் மகுடத்தின் பொருள் இன்று செயலாக மர்த்தினியில் விளங்கிற்று.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit