பொலிஸ் நிலைய உப பரிசோதகர் சடலமாக மீட்பு

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

Dead

முள்ளியவளை பொலிஸ் நிலைய உப பரிசோதகர் ஒருவர் பொலிஸ் நிலைய விடுதியில் இருந்து உயிரிழந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முள்ளியவளை பிரதேசத்தில் உப பரிசோதகராக கடமையாற்றிய டி.எம்.ஜ.பண்டார நாயக்க என்ற பொலிஸ் அதிகாரியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் நிலைய உப பரிசோதகருக்கு காலை உணவு வழங்குவதற்காக சக பொலிஸ் உத்தியோகஸ்தரொருவர் விடுதிக்குச் சென்றுள்ளார். அந்த உப பரிசோதகர் நிலத்தில் விழுந்து கிடப்பதை அவதானித்துள்ளார்.

இந்த நிலையில் உடனடியாக அவரை மாஞ்சோலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதன்போதே அவர் உயிரிழந்திருந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பொலிஸ் நிலைய உப பரிசோதகர் சுகயீனம் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை வைத்தியசாலைக்கு இன்று காலை(09) சென்று வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit