திரு­ம­ண­மான சில மணித்தியாலங்களில் தர­க­ருடன் ஓட முயற்­சித்த பெண் பொது ­மக்கள் மடக்கிப்­பி­டித்­தனர்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

திரு­ம­ண­மான சில மணித்தியாலங்களில் கண­வனை விட்டு ஓட முயற்­சித்த பெண் ணை பொது­மக்கள் மடக்கிப் பிடித்து பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ள சம்பவம் டில்லியில் இடம்பெற்றுள்ளது. இது தொட ர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது:-

டில்­லிக்கு மிக அருகில் உள்ள பரே­லியில் சி.பி.கஞ்ச் பகு­தியைச் சேர்ந்த சந்­தி­ரபால் (32). என்­பவர் கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக மணப்பெண் தேடி வந்­துள்ளார். இந்­நி­லை யில், அவ­ருக்கு அறி­மு­க­மான கல்­யாண தர கர் ஹோசியார் சிங், 35,000 ரூபா பணம் கொடுத்தால் மணம் முடித்து வைப்­ப­தாகக் கூறி­யுள்ளார்.

அதன்­படி கல்­யாண தரகர் பார்த்த பெண்­ணுடன் அரு­கி­லுள்ள காத்­திமா கிராம கோயி லில் மிக எளிய முறையில் திரு­மணம் நடந்­துள்­ளது. பின்னர் வீடு திரும்­பு­வ­தற்­காக மண­மகன் வீட்டார் மணப்­பெண்­ணுடன் பரேலி ரயில் நிலையம் சென்­றுள்­ளனர்.

அங்கு கல்­யாண தரகர் ஹோசியர் சிங் தரகு பணத்தைப் பெற்றுக் கொண்­ட­வுடன் மணப்­பெண்ணும் அவ­ருடன் சேர்ந்து தப்பி ஓட முயன்­றுள்ளார். இதனால் ஏற்­பட்ட பிரச்­சி­னையை அடுத்து பொது­மக்கள் தப்பி ஓட முயன்ற மணப்­பெண்ணை மடக்கிப் பிடித்து விசா­ரித்­துள்­ளனர். அப்­போது, அந்தப் பெண் ஏற்­க­னவே திரு­ம­ண­மா­னவர் என்­பதும் கல்­யாண தரகர் நடத்தி வந்த மோசடிக் கும்­பலை சேர்ந்­தவர் என்­பதும் இது போல பல ஆண்­க­ளுடன் இப்­பெண்ணை திரு­மணம் செய்து வைத்து தரகர் பண­மோ­சடி செய்தமை தெரிய வந்துள்ளது. இதையடுத்து குறித்த பெண்ணை பொதுமக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்னர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*