நல்லூர்க் கந்தன் திருவிழாவில் கிடைத்த வருமானம் எவ்வளவு தெரியுமா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அண்மையில் நடைபெற்று முடிந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவின் போது யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு ஒரு கோடியே 37 லட்சத்து 43 ஆயிரத்து 163 ரூபா வருமானமாகக் கிடைத்துள்ளதாக யாழ். மாநகர சபையின் ஆணையாளர் பொ. வாகீசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் யாழ். மாநகர சபையின் ஆணையாளர் பொ. வாகீசன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2017 ஆம் ஆண்டு நல்லூர் பெருந்திருவிழாக் காலத்தில் கடைகள், விளம்பரப் பதாகை, சித்த மருந்து விற்பனை, சஞ்சிகை விற்பனை, சேதன உர விற்பனை, நன்கொடை ஆகியவற்றின் மூலம் மாநகர சபைக்கு 20,580,880.94 மொத்த வருமானமாகக் கிடைத்துள்ளது.

வழங்குப் பொருட்கள், பயன்பாட்டுச் செலவுகளுக்காக கொடுப்பனவு, மேலதிக நேரக் கொடுப்பனவு உட்பட மொத்தமாக 68 லட்சத்து 37 ஆயிரத்து 717 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. செலவிலும் கூடிய லாபமாக ஒரு கோடியே 37 லட்சத்து 43 ஆயிரத்து 163 ரூபா கிடைத்துள்ளது.

உற்சவத்தின் போது வெளிவீதி கண்காணிப்பிற்காக 1,360,092 ரூபாவுக்குச் சி. சி.ரீ. வி கமரா கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் 1,290,205.41 ஆள் வருமானம் அதிகரித்துக் காணப்படுகின்றது.

இது சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது 6.7 வீதம் அதிகரித்துள்ளது.செலவானது 719,599.15 ரூபாவால் குறைவடைந்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 9.5 வீதத்தால் செலவு குறைவடைந்துள்ளது.

நல்லூர் பெருந்திருவிழாவின் போது கிடைக்கப் பெற்ற லாபம் நகர அபிவிருத்திக்கும், இதர சேவைகளுக்கும் பயன்படுத்தப்படவுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*