
டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் அனுசுயா பரத்வாஜ். தற்போது ராம்சரனுக்கு ஜோடியாக ‘ரங்கஸ்தலம் 1985’ என்னும் படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கிளாமரான உடை அணிந்து தோன்றினார். அதற்கு கமெண்ட் வெளியிட்டிருந்த ஒருவர் ‘உனக்கு மண்டைல கொஞ்சமாவது ஏதாவது இருக்கா. ஆபாசமா உடை அணிந்து வாரிங்க, குடும்பத்தோட பாக்க முடியல’ என பதிவிட்டிருந்தார்.
இதை பார்த்த அனுசுயா கோபமாக, பார்க்க பிடிக்கவில்லையென்றால் பார்க்காதீங்க. என்னுடைய வேலைய நான் பாக்குறேன். ஆடை அணியனும் என்று நீங்கள் ஆர்டர் போட வேண்டாம். உங்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் பாருங்க. காட்றதெல்லாம் பார்க்காதிங்க. நாங்கள் பொழுது போக்கு துறையில் இருக்கிறோம். எங்கள் எல்லையை நாங்கள் மீற மாட்டோம் என தெரிவித்துள்ளார்.