சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் இராஜராஜ சோழனால் உலகுக்கு கிடைத்த பொக்கிஷம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தஞ்சாவூரில் உள்ள தஞ்சைப் பெரிய கோயில் உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக கருதப்படும் சிவன் கோயில்களில் ஒன்றாகும்.

இக்கோயிலை தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில், தஞ்சைப் பெரிய கோயில் அல்லது தஞ்சைப் பெருவுடையார் கோயில் என அழைப்பார்கள்.

இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

முதலாம் இராஜராஜ சோழன் கி.பி 11ஆம் நூற்றாண்டில் இக்கோயிலை கட்டுவித்தான் என வரலாறுகள் கூறுகின்றன.

1003 – 1004ஆம் ஆண்டு தொடங்கி 1010ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010ஆவது ஆண்டோடு 1000 ஆண்டுகள் நிறைவடைந்தது.

அழியாத சோழர் பெருங்கோயில்கள் என்ற பெயரில் இக்கோயில் யுனெஸ்கோ நிறுவனத்தால் உலகப் பாரம்பரியக் களப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

தஞ்சைப் பெரிய கோயிலின் சிறப்புகள்

இக்கோயிலின் விமானத்தின் உயரம் 216அடி (66மீற்றர்) உயரம்.

இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்களைக் கொண்ட சுமார் 60 மீற்றம் உயரமான ஒரு கற்கோயிலை இராஜராஜன் எழுப்பியுள்ளார்.

இந்த பிரம்மாண்டமான கோயில் சுமார் 7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது 1007 வயதுடன் கம்பீரமாக உயர்ந்து நிற்கின்றது.

தஞ்சைப் பெரிய கோயில் இராஜராஜ சோழனால் உலகுக்கு கிடைத்த பொக்கிஷம் என்றால் அது மிகையாகாது.

கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே பெரிய சிவலிங்கமாகும்.

6 அடி உயரம், 54 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார், 23 அரை அடி உயரம் கொண்ட லிங்க தனித்தனியாக கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான நந்தி சிலையின் உயரம் 13 அடி, அகலம் 16 அடி ஆகும்.

1010ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010ஆவது ஆண்டோடு 1000 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*