கோலிக்கு ஆதரவு, தோனிக்கு எதிர்ப்பா?

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

விராட் கோலிக்கு தான் ஆதரவாக இருப்பதால்தான், தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதாக வெளியான தகவலை, இந்திய அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி மறுத்துள்ளார்.

தொடரின் பாதியிலேயே தோனி ஓய்வு பெற்றதும், ரவி சாஸ்திரி – கோலி இருவருக்கும் இடையிலான நெருக்கம்தான், தோனியின் இந்த திடீர் முடிவுக்குக் காரணம் என்ற தகவல் பரவியது.

இதுகுறித்து ரவி சாஸ்திரி கிரிக்இன்ஃபோ இணையதளத்தில் தெரிவித்ததாவது:

தோனிக்கு எந்தளவு மரியாதை இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது. விராட் கோலி மட்டுமல்ல, அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரரும், துணைப் பயிற்சியாளர்களும் அவரை மதிக்கின்றனர்.

தனக்கும், அணிக்கும் தன்னால் சரியான பங்களிப்பை அளிக்க முடியவில்லை என அவர் (தோனி) கருதி இருக்கலாம்.

ஓய்வு என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஒரு சிறந்த வீரனுக்கு, தான் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது நன்றாகவே தெரியும் என்றார் ரவிசாஸ்திரி.

இதற்கிடையே, தோனி இந்தியா திரும்ப இருப்பதாகவும், சிறிது ஓய்வு எடுத்து விட்டு ஒரு நாள் தொடரில் பங்கேற்க மீண்டும் அவர் ஆஸ்திரேலியா செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இதனால்தான் இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய பிரதமர் தேநீர் விருந்து அளித்தபோது தோனி அதில் பங்கேற்கவில்லை என்றும் பேச்சு அடிபட்டது.

இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில், “”சிட்னி டெஸ்ட் தொடங்கும்போது தோனி ஆஸ்திரேலியாவில் இருப்பார். ஆனால், அணியினருடன் அல்ல’ என்றார். தேவை ஏற்பட்டால், ரித்திமான் சாஹாவுக்குப் பதிலாக தோனி விக்கெட் கீப்பராக செயல்படுவாரா என்றபோது, “தேவையெனில், அதற்கு வாய்ப்பு இருக்கிறது’ என்றார் அவர்.

முன்னதாக, தோனி ஓய்வு முடிவு அறிவித்ததும் விராட் கோலி, தோனியை அவரது அறையில் சந்தித்து “திடீரென ஓய்வு முடிவு எடுக்க வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பி, சமாதானம் செய்ய முயன்றதாகவும், ஆனால், தோனி தன் முடிவில் உறுதியாக இருந்ததாகவும் செய்தி வெளியானது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit