இறக்காமத்தில் மீண்டும் புத்தர் சிலை வைப்பு முயற்சியால் அசாதாரண நிலை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ampara

இறக்காமம், மாணிக்கமடு பிரதேசத்தில் மீண்டும் புத்தர் சிலை வைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சியால் நேற்றைய தினம் அசாதாரண நிலை ஏற்பட்டிருந்தது.

தேரர்கள் சிலரும், பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சிலரும் இணைந்து தமிழர்களுக்கு சொந்தமான காணியை விலைக்கு வாங்கி அந்த இடத்தில் விகாரை ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே, குறித்த விடயத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது.

இது ஒரு அபகரிப்பும், சட்ட விரோதமானதும் இனவிரோத நடவடிக்கைக்கான முன்னெடுப்பும் என்று கருதியதால் சமாதான விரும்பிகள் இந்த விடயத்தைத் தடுத்து நிறுத்துமாறு உரிய தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து, அந்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர், குறித்த மத அமைப்பின் பிரதிநிதிகளுடனும், பாதுகாப்பு படையினருடனும் கலந்துரையாடியிருந்தார்.

அத்துடன், குறித்த விடயம் தொடர்பில் நேரடியாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.

இதனையடுத்து, புத்தர் சிலை வைப்பதற்கான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதுடன், பிரதேசத்தில் நிலவிய பதற்ற நிலையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit