தீவிரவாதிகளுக்கு உதவுவதாக சந்தேகப்படும் இணைய தளங்கள் முடக்கம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தீவிரவாதிகளுக்கு உதவுவதாக சந்தேகிக்கப்படும் இணையத் தளங்களை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட தீவிரவாதிகளுக்கு இந்திய இணைய தளங்கள் உதவி செய்கின்றன என்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தேசிய உளவுத் துறை எச்சரித்து இருந்தது. அதன் படி பாதுகாப்பு படையினரும் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு இணைய தளம் மூலம் உதவி செய்த மேற்குவங்க இஞ்சினியர் ஒருவரையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.. இந்நிலையில் தீவிரவாத இயக்கத்துக்கு உதவி செய்வதாக சந்தேகிக்கப்படும் 32 இணையத் தளங்களை மத்திய அரசு முடக்க உத்தரவிட்டுள்ளது.

தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையின் அடிப்படையில் மேற்கண்ட நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.மேலும், இணைய தளங்கள் தற்போது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*