ரமணா பட பாணியில் அரங்கேறிய சதி! இறந்த வாலிபருக்கு சிகிச்சையளித்த மருத்துவமனை !!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

திருப்பூரில் தனியார் மருத்துவமனை ஒன்று பணம் பறிக்கும் நோக்கில் இறந்த வாலிபருக்கு சிகிச்சை அளித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரை சேர்ந்த வாலிபர் அஜீத்குமார். சாலை விபத்தொன்றில் படுகாயமடைந்த அஜீத்குமார் அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

எனினும் அவர் சிகிச்சைப் பலனின்றி அஜீத்குமார் இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அஜீத்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என ஏமாற்றி மருத்துவமனை நிர்வாகம் ரூ. 50 ஆயிரம் பணத்தை அவரது பெற்றோரிடம் கட்டச் சொல்லியுள்ளது. அவர்களும் அதன்படி பணம் கட்டியுள்ளனர்.

இதன்பின் திடீரென அஜீத்குமாரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் படி தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அங்கு கொண்டு செல்லப்பட்ட அஜீத்குமார் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் கூறியுள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த அஜீத்குமாரின் உறவினர்கள் இது தொடர்பாக பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில், அஜீத்குமார் உயிர் இழந்ததை மறைந்து தனியார் மருத்துவமனை சிகிச்சை அளித்தது கண்டுபிடிக்கப் பட்டதையடுத்து மருத்துவமனையின் நிறுவனர் மலர்மன்னனை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் ரமணா பட பாணியில், தனியார் மருத்துவமனை ஒன்று பணத்தை வாங்கிக் கொண்டு இறந்தவருக்கு சிகிச்சை அளித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*