ஆயுர்வேதத்தில் உணவு முறைகள்

பிறப்பு : - இறப்பு :

இந்த இயல்பு நிலை என்பது மனிதருக்கு, மனிதர் வேறுபடும். இந்த வேறுபாடுகளை வைத்துதான் ஆயுர்வேதம் மனிதர்களை வகைப்படுத்துகிறது.

ஆயுர்வேதத்தில் உணவு முறைகள்
பிரபஞ்சத்தின் கோடானுகோடி மனிதர்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கும். ஒருவரது உடலமைப்பு, இதயம், மூளை முதலான எல்லா உறுப்புகளும் கருவிலேயே முடிவாகின்றன. இவற்றின் இயல்பான செயல்பாடுகளில் ஏற்படும் மாறுதல்களே நோய்வர அடிப் படை காரணம்.

இந்த இயல்பு நிலை என்பது மனிதருக்கு, மனிதர் வேறுபடும். இந்த வேறுபாடுகளை வைத்துதான் ஆயுர்வேதம் மனிதர்களை வகைப்படுத்துகிறது.
நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்கள். மனிதர்களின் உடலில் தோஷங்களை ஏற்படுத்துகின்றன. வாதம், பித்தம், கபம் ஆகியனவே அவை. தோஷம் என்றால் மாறுதலுக்கு உட்பட்டது என்று பொருள். அவை தாமே மாறுவதோடு, உடலின் பிற தாதுக்கள் (திசுக்கள்) மாற்றவும் செய்கின்றன.

இந்த 3 தோஷங்களும் ஒவ்வொரு உடலிலும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் இருக்கின்றன. இந்த விகிதம் மாறுவதே பெரும்பாலான நோய்கள் வர காரணமாகின்றன. நோய்க்கு தரப்படும் மருந்து இயல்பு நிலையை (தோஷங்களின் விகிதப்படி) திரும்ப கொண்டு வருகிறது. தோஷங்கள் இயல்பு நிலையை அடைந்ததும், நோய் தானாக குணமடைகிறது.

பிரபஞ்சத்தை இயக்கும் பிரபஞ்ச சக்திகளின் அடையாளமே இந்த 3 தோஷங்களும். இவை உணவு பழக்கம், நடைமுறை மாறுதல், காயமடைதல், தினசரி, பருவமாற்றங்களால் வரும் மாறுதல்கள், மன அழுத்தம் முதலான உளவியல் காரணங்கள் ஆகியவற்றால் சமநிலை மாறுகின்றன.

3 தோஷங்களில் எது மற்றதை விட அதிகமாக, ஒருவரது உடலில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை பொறுத்து, மனிதர்களை 7 வகையாக பிரிக்கிறது ஆயுர்வேதம்.

1. வாததோஷம் மட்டும் தனித்திருப்பது. 2. பித்த தோஷம் மட்டும் தனித்திருப்பது. 3. கபம் மட்டும் தனித்திருப்பது என தனியே இருக்கும் 3 வகை. 4. வாத பித்தம் 5. பித்த கபம். 6. வாத கபம் என இரட்டை தோஷங்களின் ஆதிக்கமுடைய 3 வகை. 7. 3 தோஷங்களும் அதிகமிருந்து ஆதிக்கம் செலுத்தும் அரிதான ஒருவகை என்பன அவை.

இதனை ஒருவரின் பிரகிருதி என்பர். இயல்பு நிலை என்பது இதன்பொருள். நோய் காரணமாக இந்த இயல்பு நிலை பாதிக்கப்படுமே தவிர, அடிப்படையான கட்டமைப்பு மாறாது. 3 தோஷங்களை பற்றி பார்ப்போம்.

வாத தோஷம்: பஞ்ச பூதங்களில் காற்று, ஆகாயம் ஆகிய இரண்டும் சேர்ந்தது வாத தோஷம். காற்று என்பது சக்தி. ஆகாயம் என்பது சக்தி வெளிப்படும் இடம்.
ஆகாய வெளி அதிகமாக இருந்து, சக்தி குறைவாக இருந்தால் மாறுதல்கள் இருப்பினும் புலப்படத்தக்க அளவில் இருக்காது. ஆனால் குறைந்த இடத்தில் அதிக சக்தி இருக்கும்போது சிதைவு நேர்கிறது. ஆகவே வாததோஷம் என்பது ஆகாயம், காற்று இரண்டுக்கிடையேயான சமநிலையை பாதுகாக்கும் சக்தி என்பது தெளிவாகின்றது. இதுதானே உருவாகி தானே விரிகிறது, பரவுகிறது.

3 தோஷங்களிலும் இதுவே அதிக சக்தி வாய்ந்த தோஷம் ஆகும். ஏனெனில் உடலின் அடிப்படை இயக்கங்களான செல் டிவிஷன், இதயம், மூச்சு ஆகிய வற்றுக்கு காரணமாக இருக்கிறது. பிராணவாயுவாக இருந்து உயிரை நிலைக்க செய்கிறது. உடலின் இச்சை, அனிச்சை செயல்களை கட்டுப்படுத்துகிறது. கண், மூக்கு போன்ற புலன் உறுப்புகளை அவற்றின் வேலைகளை செய்ய தூண்டி, அவற்றை மூளைக்கு அனுப்ப செய்கிறது.

அதிகபடியான நீர்ச்சத்தை உடலில் இருந்து வெளியேற்றி தண்ணீர் சமநிலையை காக்கிறது. கழிவு பொருட்களை வெளியேற்றுகிறது. எல்லா நாளங்களையும் ஊடுருவி செல்கிறது. தாதுக்களை அதனதன் இடத்தில் தக்கவைத்து, உருவ அமைப்பை காக்கிறது. கருவுக்கு உருவம் தருகிறது. மனதை கட்டுப்படுத்தவும், தூண்டவும் செய்கிறது. வேலை செய்யும் ஆர்வத்தை தருகிறது. அக்னியை தூண்டுகிறது. நரம்பு மண்டலம், ஜூரண மண்டலம் ஆகியவற்றின் செயல்பாடுகளுக்கு காரணமாக அமைகிறது. சில சமயங்களில் செயல்பாடுகளுக்கும் காரணமாகிறது.

வாதப்பிரகிருதி உடையவர்களது உடற்கூறுகள்: வாத பிரகிருதி உடையவர்கள் மெலிந்த தேகம் கொண்ட வர்கள் கோடையில் கூட அதிகம் வியர்க்காது. எப்போதும் வெப்பமான கால நிலையை விரும்புவர். குளிர் பிரதேசங்களுக்கு சென்றால் உடல் வலியும், விறைப்பும் ஏற் படும். தலைமுடி சுருண்டு, வறண்டு கறுப்பாக இருக்கும். உடல் வறட்சி யாக இருக்கும். வயிற்றில் அடிக்கடி கோளாறு ஏற்படும். வெடிப்புகள் அதிகம் இருக்கும். இனிப்பு சுவை யில் நாட்ட முடையவர்களாக இருப்பர். பெண்களுக்கு மாத விடாய் ஒழுங்காக இருக்காது. அச் சமயத்தில் வலி அதிகம் இருக்கும். மிகவும் ஆர்வத்துடன் வேலையில் ஈடுபடுவார்கள். ஆனால் விரைவில் ஓய்ந்து விடுவர்.

வாததோஷ சமநிலை மாறுவதாலோ, பித்தம், கபம் ஆகிய தோஷங்களின் விகித மாறுபாட்டுடன் கூடியதாலோ நோய்கள் வருகின் றன. இரவில் வெகுநேரம் விழித் திருத்தல், முதலில் உண்ட உணவு செரி மானம் ஆகுமுன்பே மறுபடி உணவு உண்ணல் ஆகிய காரணங் களால் வாத சமநிலை மாறுகிறது. வாத தோஷ மிக்க மனிதர்கள் தோல், நரம்பு சம்பந்தமான வியாதிகள், மனசிதைவு நோய்கள் ஆகியவற்றால் பாதிக்கப்படுவதில்லை.

வாதம் அதிகரித்து இருப்பதற்கான அறிகுறிகள்: பயம், கவலை, அதைரியம், குழப்பம் ஆகிய மனச்சி தறல், அதிக சிந்தனைகள் ஆகிய மனநிலைகள் வலிப்பு, முகவாதம், தானாகவே கண் துடித்தல் ஆகிய நிலைகள் வறண்ட, வெடித்த தோல் அமைப்பு. வாயு தொல்லை, மலச்சிக் கல், வயிறு உப்புசம், வீங்குதல், கெட்டியான மலம் ஆகிய தன்மைகள்.

எடை குறைதல்: வேகமான காற்று, குளிர் இவற்றை விரும்பாவை. அதிக சத்தத்தை விரும்பாமை. தடைப்பட்ட தூக்கம். மாறுபட்ட உணவுமுறை, நடைமுறை பழக்கம் மருந்துகள் ஆகியவற்றினால் வாதத்தை குறைக்கலாம்.

வாதத்தை குறைக்கும் உணவுகள்: இயற்கையிலேயே இனிப்பு, உப்பு, புளிப்பு சுவை கொண்ட உணவு கள் இளஞ்சூடான உணவுகள். செரிமா னத்துக்கு பின் சக்தி.

நன்மை தரும் உணவுகள்: கோதுமை, அரிசி போன்ற தானியங்கள், உளுந்து, பச்சை பயிறு முதலிய பருப்பு வகை கள், தயிர், நெய், வெண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண் ணெய், மீன் எண்ணெய், சீஸ் முதலியவை. முருங்கை, வெங்காயம், முள் ளங்கி, பூசணி முதலிய காய்கறிகள், மாம்பழம், தேங்காய், திராட்சை, பேரிச்சை, அன்னாசி, அத்திப்பழம் முதலிய பழங்கள், பாதாம் பருப்பு, மல்லி, பெருங்காயம், சீரகம், பூண்டு முதலிய வாசனை பொருட்கள் ஆகியவை நன்மை தருவன.

நன்மை தராத உணவுகள்: குளிர்ந்த, வறண்ட துவர்ப்பு சுவையுள்ள பொருட்கள், பார்லி கொள்ளு ஆகியவை. பட்டாணி, கொண்டை கடலை முளைகட்டிய பயறு வகைகள், கீரை, உருளை கிழங்கு, பாகற்காய் போன்ற காய்கறிகள், வெள்ளரி, தர்பூசணி ஆகிய பழங்கள், மிளகாய், மிளகு முதலிய நறுமண பொருட்கள், தேன், கரும்பு ஆகியவை நன்மைதரா.

தவிர்க்க வேண்டியவை: குளிர்ந்த பானங்கள், குளிர்ந்த வெப்பநிலை உடையவை. உண்டபின் குளிர்ச்சி தருபவை ஆகியவை இதில் அடங்கும். காலை, மாலை வேளைகளில் சமைக்காத உணவுகளை அதிகம் எடுக்கக்கூடாது. அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள். கார்பன் – டை- ஆக்ஸைடு ஏற்றபட்ட குளிர்பானங்கள். காபின், நிக்கோடின் போன்ற ஊக்கமூட்டிகள், வறுத்த உணவுகள், வெள்ளை சர்க்கரை கலந்தவை. கசப்பு, காரம், துவர்ப்பு சுவையுள்ள உணவுகள்.

பொதுவான அறிவுரைகள்: உணவு உண்ணும் சூழல் அமைதியாக இருக்க வேண்டும். நேரந்தவறாமல் பார்த்து கொள்ள வேண்டும். உணவுடன் சேர்த்து, பால் அருந்தக்கூடாது. பட்டை, ஜாதிக்காய் போன்ற நறுமண பொருட்கள் சேர்க்கப்பட்ட பாலை உணவுக்கு 1 மணி நேரம் முன்போ, பின்போ எடுக்க வேண்டும். உணவு உண்டபின் அரை மணி நேரத்திற்குள் பழம், பழச்சாறு எடுக்கக்கூடாது. கடைசி கவனம் சாப்பிட்டு முடித்து, அடுத்த வேலைக்கு போகும் முன்பு நீண்ட மூச்சு ஒன்று எடுக்க வேண்டும்.

பித்ததோஷம்: பித்தம் என்பது சூரிய வடிவிலான பிரபஞ்சதத்தின் வெப்ப சக்தி ஆகும். சூரியன் கடலில் உள்ள நீரை ஆவியாக்கி மேகங்களாக உருமாற்றுகிறது. அதுவே மழைநீராக பெய்து வாழ்விக்கிறது. அதைபோல் பித்ததோஷமே, செரிமானத்துக்கும், உருமாற்றத்துக்கும் காரணமாகிறது. இது ஆரோக்கியத்துக்கு மிகவும் அடிப் படையான, தேவையான செயல். இது சரிவர நடந்தால் உடல்நலம் சரியாக இருக்கும்.

வெயில் காலத்தின் அதிகபடியான வெப்பம் உடலுக்கு அயற்சியை தந்து, உடல் வலிமையை குறைக்கிறது. அதுவே பித்ததோஷம் அதிகமாக காரணமாகிறது. வெப்பமான, வறண்ட நிலத்தின் மீது மழை பொழியும் போது, கார சுவையுள்ள பூமி, புளிப்பு சுவைக்கு மாறுகிறது. அதனால் பித்த தோஷம் கூடுகிறது. குளிர்ந்த சூழல் பித்த தோஷம் அதிகமாக அனுமதிக்காது. இதன்பின் (மழை காலத்தின்) வரும் இலையுதிர் காலம், வெப்பம் அதிகமாவதால் கூடியிருக்கும் பித்த தோஷத்தை செய்யும். அதன் காரணமாக நோய்கள் வரும். ஹேமந்தருது காலத்தின் குளிர்ந்த தன்மையும், இனிப்பு சுவையும் பித்த தோஷத்தை குறைக்கும்.

உடற்கூறு: பித்த பிரகிருதி உள்ளவர்களுக்கு நடுத்தர உடல்வாகு இருக்கும். உடல் எப்போதும் கதகதப்பாக இருக்கும். முடி செம்பட்டை நிறத்தில் இருக்கும். சீக்கிரம் நரைத்து விடும் அல்லது வழுக்கை விழும். பசி, தாகம் இரண்டுமே அதிகமாக இருக்கும். சீக்கிரத்தில் போதைக்கு அடிமை ஆவர். கற்பனை திறன் அதிகம் இருக்கும். எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பர். வெற்றி பெற வேண்டும் என்ற வெறி உள்ளவர்கள். கனவு, பயம் போன்றவை எதுவுமில் லாமல் நிம்மதியாக தூங்க முடியும்.

உடலின் வனப்புக்கும், பிரகாசத்திற்கும் காரணமாகிறது. பார்வை, பசி, தாகம், ஞாபகசக்தி, புத்தி கூர்மை, புலன் உறுப்புகளின் செயல்திறன் உடலின் மென்மை மற்றும் சக்தி ஆகியவற்றுக்கு காரணமாகிறது. சுரப்பிகளின் செயல் பாடுகளுக்கு காரணமாகிறது. மாறும்போது எதிர்மறை உணர்வுகள் (பொறாமை, கோபம்) தோன்றுகின்றன. நெஞ்செரிச்சல் ஆகியன தோற்றுகின்றன.

புளிப்பான, உறைப்பான வாசனை பொருட்கள் ஆகியவற்றை உண்ணல், கோபப்படுதல், பயப்படுதல் ஆகிய உணர்வு நிலைகளில் இருத்தல், அதிக நேரம் வெயிலில் இருத்தல் ஆகிய காரணங்களால் பித்த சமநிலை மாறுகிறது. பித்த பிரகிருதி உடையவர்கள் இதயநோய் மற்றும் வாதநோய்களால் பாதிக்கப்படுவதில்லை.

பித்தம் அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகள்: பித்தம் அதிகரித்தால் அதிக பருக்கள், தோல் சிவந்து தடித்திருத்தல், முட்டுகளில் வீக்கம், நெஞ்செரிச்சல், அல்சர், அமிலம் மேல்நோக்கி வருதல், உணவு தக்க சமயத்தில் எடுக்காவிடில் வாந்தி வரும் உணர்வு, உடல்சூடு, இளகிய மலம், கண்கள் தெளிவில்லாமல் சிவந்திருத்தல் ஆகிய அறிகுறி கள் காணப்படும்.

எல்லாம் மிக சரியாக இருக்க வேண்டும் என்று எண்ணம், பொறுமையின்மை ஆகிய குணங்கள் நிறைந்திருக்கும்.

பித்தம் சமநிலைப்பட எடுக்க வேண்டிய உணவுகள்: இனிப்பு, கசப்பு, துவர்ப்பு சுவை மிகுந்த உணவுகள், இயற்கையாகவே குளிர்ந்த, உண்டபின் குளிர்ச்சி தரக்கூடிய உணவுகள், மல்லி, வெந்தயம் போன்ற நறுமண பொருட்கள், ஆலிவ் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் ஆகியவற்றை மிதமாக எடுத்துக் கொள்ளலாம்.

உணவு உண்ணும் சூழல் அமைதியாக இருக்க வேண் டும். சரியான இடைவெளியில் உண்ண வேண்டும். பாலை உணவுடன் சேர்த்து எடுக்கக் கூடாது. உணவுக்கு ஒரு மணி முன்போ, பின்போ தான் பால் அருந்த வேண்டும். கடைசி கவனம் உண்ட பின்பு ஒரு நெடிய மூச்சு விட வேண்டும்.

கூடாதவை

புளிப்பு, காரம் அதிக உப்பு சுவையுள்ள பொருட்கள், இயற்கையில் சூடுள்ள உணவு, செரிமானத்துக்கு பின் சூடு தரும் உணவு. மிளகாய், பதப் படுத்தப்பட்ட உணவுகள், பொரித்த உணவுகள், பழம், பழரசம் ஆகியவற்றை சாப்பிட்டு அரை மணிக்குள் எடுத்தல், காபின், நிகோ டின் போன்ற ஊக்க மூட்டிகள் ஆகியன கலப்பட கூடாதன ஆகும்.

பித்ததோஷ சமநிலைக்கான வாழ்க்கை முறை: சாப்பிடு வது, தூங்குவது ஆகிய அனைத் தும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நடக்க வேண்டும். வேலைக்கு நேரம் ஒதுக்குவது போல ஓய்வுக்கும், விளையாட்டுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் உடற்பயிற்சி (மிதமாக) செய்ய வேண்டும். வெயில் நேரத் தில் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும். உடல் மனம் ஆகியவற்றை குளுமையாக வைத்திருக்க வேண்டும்.பொதுவாக, பித்தத்தை உடலின் வளர்சிதை மாற்றம், நொதி சம்பந்தமான செயல்பாடுகளின் காரணி என்று கொள்ளலாம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit