மனிதாபி மானமற்ற ரஜினிகாந்த்!! ஒரு சின்ன பையனுக்கு இருக்கும் அறிவும் தைரியமும் இவருக்கு இல்லைதான்!!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை போராடிய மாணவி அனிதா இன்று தற்கொலை செய்துகொண்டார். இவரது மரணம் தமிழகத்தில் பல அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது. அனிதாவின் மரண செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த அனைவரும் மத்திய மாநில அரசுகளை குற்றம் சாட்டுகின்றனர். அரசியல்வாதிகள் பலரும் இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளை குற்றம்சாட்டி கடுமையாக விமர்சிக்கின்றனர்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் நீண்ட காலமாக அரசியலுக்கு வருகிறேன் என கூறிக்கொண்டு தற்போது கொஞ்சம் வேகம் காட்டும் நடிகர் ரஜினிகாந்த் இதற்கு சிறு கண்டனத்தை கூட மத்திய, மாநில அரசுகள் மீது வைக்காமல் மிகவும் கவனமாக டுவீட் செய்துள்ளார். நடிகர் ஜி.வி.பிரகாஷ் கூட தனது கண்டனத்தை மிகவும் தைரியமாக வலுவாக வைத்துள்ளார்.

ஆனால் அவருக்கு இருக்கும் தைரியம் நடிகர் ரஜினிக்கு இல்லாமல் போய்விட்டது என பலரும் கூறி வருகின்றனர். நடிகர் ஜி.வி.பிரகாஷ் தனது டுவிட்டரில் கழிப்பறை கூட இல்லாத வீட்டில் மருத்துவ கனவோடு பிறந்த அனிதா இன்று இல்லை. நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் மரணம் அதிகாரமும், சட்டமும் சேர்ந்து செய்த படுகொலை என காட்டமாக கூறியுள்ளார்.

ஆனால் நடிகர் ரஜினிகாந்த் மிகவும் கவனமாக எந்த சிக்கலும் வரக்கூடாது என்பதற்காக மாணவியின் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். மரணச்செய்தி கேட்டு வேதனையடைந்ததாகவும். மரணம் அடையும் முன்னர் அவரது எண்ண ஓட்டங்களை நினைத்து வருந்துவதாகவும், அனிதாவின் குடும்பத்துக்கு இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*