மீண்டும் சர்ச்சையில் நித்தியானந்தா ஆசிரமத்தில் பெண் மர்ம மரணம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நித்தியானந்தா ஆசிரமத்தில் உயிரிழந்த சங்கீதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை திருச்சி பொலிசில் புகார் அளித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் திண்டுக்கல் சாலை நாவலூர் குட்டப்பட்டு கிராமத்தை சேர்ந்த அர்ஜுனன் என்பவரது மகள் சங்கீதா (24). பி.சி.ஏ. படித்துள்ள சங்கீதா, நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் துறவி பயிற்சிக்கு சேர்ந்தார்.

இந்நிலையில் கடந்த 28ம் திகதி ஆசிரம வளாகத்தில் மர்மமான முறையில் சங்கீதா உயிரிழந்தார்.

உடனடியாக சங்கீதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்து அவரது பெற்றோரிடம் ஆசிரமத்தினர் ஒப்படைத்தனர்.

திருச்சிக்கு அவசரஊர்தி மூலம் கொண்டு வரப்பட்ட சங்கீதாவின் உடல் நாவலூரில் அடக்கம் செய்யப்பட்டது. சங்கீதாவின் மரணம் தொடர்பாக யாரிடமும் குறிப்பாக ஊடகங்களில் வாய் திறக்கக் கூடாது என அவரது குடும்பத்தாரிடம் ஆசிரமத்தார் சத்தியம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் திருச்சி ராம்ஜி நகர் காவல்நிலையத்தில் சங்கீதாவின் தந்தை புகார் ஒன்றை அளித்தார்.

அதில், தனது மகள் சங்கீதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அதனை கண்டுபிடிக்குமாறும் அவர் தெரிவித்திருந்தார்.

முதலில் அந்தப் புகாரை ஏற்க மறுத்த பொலிசார், பின்னர் அந்த புகார் குறித்து விசாரிக்குமாறு கர்நாடகா மாநிலம், பிடரி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*